விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மகள் விடுமுறையில் செய்து வர வேண்டும் என பள்ளியில் சொல்லி அனுப்பி இருந்த "அசைன்மெண்ட்" களை செய்து முடித்து கத்தை கத்தையாக அடுக்கி வைத்திருந்தாள்.
"லீவுக்கு தந்த எல்லா அசைன்மெண்ட்டையும் முடிச்சிட்டேன் டாடி. இந்தி மட்டும் படிக்க முடியல. ஜி திட்டுவாங்க" என வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள்.
லீவுன்னா படிக்கனுமா? ஜி கேட்டா ஊருக்கு போயிருந்தேன்னு சொல்லு" எனச் சொல்லி அனுப்பி இருந்தேன்.
"பள்ளியில் இருந்து திரும்பியவளிடம் முதல் நாள் வகுப்பு எப்படி? அசைன்மெண்டெல்லாம் ஓ.கே.யா? "என்றேன்.
அவளோ மிகுந்த சலிப்புடன்," அடப்போங்க டாடி. எல்லாமே வேஸ்ட்டாயிடுச்சு. மிஸ் எதுவுமே கேட்கவில்லை. அபி (அவள் தம்பி) சொன்ன மாதிரி மிஸ் மறந்துட்டாங்க போல" என்றபடி பள்ளிக்கு உற்சாகமாய் எடுத்துச் சென்ற அசைன்மெண்டுகளை தன் அலமாரியில் வைத்துக கொண்டிருந்தாள்.
ஆசான்களே......ஆசிரியப் பெருந்தகைகளே......விடுமுறைகளை பிள்ளைகள் முழுமையாகக் கொண்டாட விடுங்கள். அல்லது அந்த விடுமுறையில் பிள்ளைகளுக்குத் தந்த திட்டங்களை பெயரளவிற்காவது பார்த்து உற்சாகப் படுத்துங்கள். அதன் வழி அவர்கள் பெறும் சந்தோசம் இன்னும் சிறப்பாய் அவர்களை இயங்க வைக்கும்.
உங்களின் பாராமுகம் அவர்களின் இயல்பூக்கத்திற்கு தடையாக இருக்க வேண்டாமே!
adakkadavulee :( hmm
ReplyDeletebut cover and writing super . Ilakiyavukku vaazththukaL :) super ponnu <3
தங்களது ஆதங்கம் நியாயமானது நண்பரே
ReplyDeleteபெரும்பாலான பள்ளிகளில் இப்படித்தான்.
ReplyDeleteஅங்கேயுமா...?
ReplyDelete