Wednesday 27 September 2017

இத்தனை மெனக்கெடல் அவசியமா?

நாள் : 1
எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க?

நான் செய்றது இருக்கட்டும். நீயும், உன் தம்பியும் என்ன செய்யப் போறீங்க?

நான் ஸ்டுடியோவுல காட்டுன மாடல் மாதிரி செஞ்சு கொண்டு வந்து தந்துடுங்க. அதை நாங்க கிஃப்டா செஞ்சிடுறோம்.

அதுக்கு போட்டோவெல்லாம் வேணுமே. மிஸ்கிட்ட யாரு கேட்கிறது?

நான் கேட்கிறேன்.

அலைபேசியில் பேசி முடித்ததும், மிஸ் தருறேன் சொல்லி இருக்காங்க.

நாள் : 2
டாடி………போட்டோ வாங்கியாச்சா?

மிஸ் கொடுத்து விடலயே.

அவங்க கொடுக்கலைன்னா நீங்க கேட்கலாம்ல?

கேட்டு பார்க்கிறேன்.

உடனே கேட்டு போட்டோ வாங்கி நான் சொன்ன டிசைன்ல ரெடி பண்ணி வாங்கிட்டு வந்துடுங்க. 

நாள் : 3
உங்க மிஸ் தந்த போட்டோவுல மாப்பிள்ளை போட்டோ நீ சொன்ன டிசைனுக்கு ஏத்த மாதிரி இல்லை. சைடுல நிக்கிற மாதிரி இருக்குற அந்த போட்டோவை வச்சு டிசைன் செய்ய முடியாதாம்.

எப்படி வேணுமோ அப்படி இருக்குற மாதிரி போட்டோ கேளுங்க.

நான் கேட்க முடியாது. உங்க மிஸ்கிட்ட நீ கேளு.

சும்மா, சும்மா போன் பண்ணில்லாம் என்னால கேட்க முடியாது டாடி. நீங்களே கேட்டு அரேஜ் பண்ணுங்க.

நாள் : 4
போட்டோ பேசி வாங்கிட்டேன். டிசைன் பண்ண கொடுத்தாச்சு. நாளைக்கு காலையில கிடைச்சிடும்.

ஸ்கூலில் இருந்து வந்ததும் நாங்க பார்த்த பின்னாடி பேக் பண்ணிக்கிடலாம். வெயிட் பண்ணுங்க.

நாள்: 5
நீ சொன்ன டிசைன்ல இருக்கா.

சூப்பர். நான் நினைச்ச மாதிரி வந்துருக்கு. நான் எங்க டிராயிங் மாஸ்டர் கிட்ட சொல்லி ஒரு வெட்டிங் கிஃப்ட் கார்டு வரைஞ்சு வாங்கிட்டு வந்துருக்கேன். அதுவும் சும்மா இல்ல. டிராயிங் சார் கிட்ட ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி வாங்கிட்டு வந்துருக்கேன்.

அதையும் கிஃப்ட்டுக்குள்ள வச்சுக் கொடுத்துடலாமா?

அது நல்லா இருக்காது.

அப்ப தனியா் கொடு.

அது சரியா வராது. கொஞ்சம் யோசிச்சு கிஃப்ட்டுக்கு உள்ளேயே இருக்கிற மாதிரி வச்சுக் கொடுக்க பார்ப்போம். அந்தக் கார்டுல எழுதுறதுக்கு நல்ல வாசகமா ஒன்னு சொல்லுங்க. கவிதை மாதிரி இருந்தா கூட .கே.

கவிதை எல்லாம் இப்ப யோசிக்க முடியாது.

அப்ப ஒன்னு செய்யுங்க. அந்தக் கார்டு வெளியில தெரியிற மாதிரி இருக்கனும். ஆனா, அது பிளைன்னா (PLAIN) இருக்கக் கூடாது.

பறக்குற மாதிரி அதுல ஏதாவது வரையலாமா?

எங்க டிராயிங் சார் முதல் பக்கத்துல வரஞ்சு தந்துட்டாங்கள்ள டாடி.

அப்ப வேற ஐடியா சொல்லு.

ஒரு 3டி (3D) பட்டர்ஃபிளையை கார்டு நடு பக்கத்துல ஒட்டி அது வெளியில இருக்குற மாதிரி கிஃப்ட்டை பேக் பண்ணி கொடுங்க.

முயற்சி செய்றேன்.

டாடி…..… டாடி……. ஒரு நிமிசம் வெயிட் பண்ணுங்க. கிஃப்ட் பேப்பர் கலர் சரியில்ல. நாளைக்கு காலையில நல்ல கலரா கிஃப்ட் பேப்பர் வாங்கி பேக் பண்ணலாம்.

நாள் : 6
புளு கலர் கிஃப்ட் பேப்பர் நல்லா இருக்குமாடா அபி?

அது நல்லா பளிச்சுன்னு இருக்காது. நான் மஞ்சக் கலர் வாங்கிட்டு வாரேன்.

டாடி……மஞ்சக் கலர் பைனலாயிடுச்சு. நான் சொன்ன மாதிரி பேக் பண்ணிடுங்க.

நாளைக்கு எங்க கிஃப்ட நாங்க தனியா எங்க மிஸ்க்கு கொடுத்துறோம். நீங்களும், அம்மாவும் உங்க கிஃப்ட தனியா கொடுத்துக்கங்க.

ஒரு சாதாரண கிஃப்டை தயார் செய்ய ஆறு நாளை மகனும், மகளும் (இருவருக்கும் அவர் பாட ஆசிரியை) எடுத்துக் கொண்டதில் தெரிந்தது அந்த ஆசிரியையின் அன்பும், பள்ளியில் குழந்தைகளின் மீது அவர்கள் காட்டிய அக்கறையும்!

2 comments:

  1. கிஃப்ட் வாங்குனோமா பேக் பண்ணோமா கொடுத்தோமா இல்லாம அழகான ஒரு மெனக்கெடல். ஐ லைக் இட்.

    ReplyDelete
  2. அழகான அருமையான மெனக்கெடல்தானே... தொடரட்டும்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete