Monday 12 February 2024

பாட்டனி கிராஷுவேட்( BOTANY GRADUATE) தானே?

நீங்களும், அம்மாவும் பாட்டனி கிராஷுவேட்( BOTANY GRADUATE) தானே?

ஆமாம். இதுல என்ன உனக்கு இப்ப டவுட்டு?

இல்ல…..எனக்குக் கொஞ்சம் “ஹெர்பேரியம் (HERBARIUM) ஒர்க்சீட்” செய்ய வேண்டி இருக்கு. அதை நீங்க ரெடி பண்ணி வச்சுட்டா, நான் காலேஜ்ல சப்மிட் செய்ய ஈசியா இருக்கும்.


சரி…….லிஸ்ட் அனுப்பு.

அனுப்பியாச்சு.

என்ன, இவ்வளவு அனுப்பி இருக்க?

இது மொத்த லிஸ்ட். நீங்க முதல்ல பத்து மட்டும் ரெடி பண்ணுங்க. ஹைலைட் செய்து அனுப்பி இருக்கேன். அதை ரெடி பண்ணி வச்சிடுங்க.

விடுமுறைக்கு வீடு வந்த போது தயார் செய்து வைத்திருந்த பத்து ஹெர்பேரியங்களை கல்லூரிக்கு எடுத்துச் சென்றவள், இரண்டு தினங்களில் மீண்டும் அழைத்தாள்.

நீங்க தயார் செய்து தந்ததில் இரண்டு ரிஜெக்ட். மிச்சம் இருக்குறதை சீக்கிரமா ரெடி பண்ண ஆரம்பிச்சிடுங்க. அதோட சேர்த்து ரிஜெக்ட் ஆன இரண்டு செடிகளையும் சேர்த்து செய்துடுங்க.

சரி….செய்துடுவோம்.  ஒரு சந்தேகம். உங்க காலேஜ் கேம்பஸ்லயே நீ இதெல்லாம் கலெக்ட் பண்ணலாமே.

நானும் கொஞ்சம் ரெடி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். இருந்தாலும், இரண்டு “பாட்டனி கிராஷுவேட்“ தயார் செய்யும் போது அதுல ஒரு “பெர்பெக்‌ஷன்” இருக்கும்ல. அதுனால தான் உங்க இரண்டு பேருகிட்டேயும் கொடுத்திருக்கேன். அப்புறம், ஹெர்பேரியம் சப்மிட் செய்ய டெட்லைன் கொடுத்துட்டாங்க. அதுனால, இலை கருப்பாகிடாமல், ஃபங்கஸ் ஏதும் வந்துடாமல், இலை உதிர்ந்திடாமல், பூ கருப்பாகிடாமல்,  சுருக்கம் ஏதும் இல்லாமல், அயர்ன் பாக்ஸ் வைக்காமல் தயார் பண்ணி அனுப்பிடுங்க என்றாள்.

படிக்கும் போது மட்டுமல்ல, ஹெர்பேரியம் தயார் செய்து விற்கும் போது கூட இவ்வளவு கஷ்டப்படவில்லை. இப்போது ஒரு அறையில் சேகரித்த செடிகள் ஹெர்பேரியமாக மாறிக் கொண்டிருக்கிறது.

என்னமா வேலை வாங்குதுக!!

No comments:

Post a Comment