Showing posts with label எட்டயபுரம். Show all posts
Showing posts with label எட்டயபுரம். Show all posts

Sunday, 11 July 2021

ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற முதல் வீரன் அழகுமுத்துக்கோன்!

வரலாறுகள் எப்பொழுதும் இரகசியங்களை, இன்னும் அவிழ்கப்படாத முடிச்சுகளை தன்னகத்தே வைத்த படியே இருக்கின்றன. அதனாலயே வாசிப்பதற்கு சுவையானதாகவும், வரலாற்றாய்வாளர்களுக்கு நல்லதொரு தேடல் களமாகவும் வரலாறுகள் இருந்து வருகின்றன.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாக 1857 ம் ஆண்டை வரலாற்று நூல்கள் இன்றும் குறிப்பிட்டு வருகின்றன. ஆனால், அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே வேலூரில் ஒரு மாபெரும் புரட்சி நிகழ்ந்தது. காலம் கடந்தே வரலாற்றாய்வாளர்களால் அது வெளிக் கொணரப்பட்டது. அதேபோல, ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் முழக்கம் செய்தவன் கட்டப்பொம்மன் என ஒரு சாரார் எழுதி வர ஆவணக்குறிப்புகளோ அந்த இடத்தை பூலித்தேவனுக்குத் தந்தன. தென் பிராந்தியங்களில் இருந்த பாளையங்கள் மற்றும் அதை ஆட்சி செலுத்தி வந்த பாளையக்காரர்கள் பற்றி அறிய வேண்டிய தகவல்களை தென்னிந்திய சுதந்திரக் களம் இன்றும் தனக்குள் புதைத்தே வைத்திருக்கிறது. அதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கும் ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு புது தகவல் கிடைத்த படியே இருக்கிறது. அப்படியான தேடலில் தான் ”வீரன் அழகுமுத்துக்கோன்” மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தார்.