Showing posts with label பா.ராகவன். Show all posts
Showing posts with label பா.ராகவன். Show all posts

Wednesday, 26 January 2022

கபடவேடதாரி – ஒரு வரி கதையும் ஒருநூறு மிகு புனைவும்!

Bynge ல் தொடராக வெளியாகி - எழுத்து பிரசுரம் வழியாக நூலாகி இருக்கும் ”கபடவேடதாரி” யின் ஆசிரியர் பா.ராகவன்.

கபடவேடதாரியில் கதை என்று பார்த்தால்,”தன்னைத் தண்டித்த கூட்டத்தைப் பலி வாங்கக் கிளம்புகிற ஒருவன் அதற்காக என்னவெல்லாம் செய்கிறான்? அவன் நினைத்தபடி நடந்ததா?” என்ற ஒன்லைன் மட்டுமே! அந்த ஒன்லைனை ஐம்பது அத்தியாயங்களுக்கும் புனைவை துணைக்கு வைத்துக் கொண்டு சுவராசியமாக நகர்த்தி இருக்கிறார்.

காதல், அழுகை, ஏமாற்றம், காமம், கலாச்சாரம், சித்தாந்தம், அரசியல், நகைச்சுவை என எல்லா தளங்களையும் தொட்டு  நிற்கும் நாவலின் களத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கி இருக்கும் பிரமாண்ட பின்புலம் தரும் இரசனையும், காட்சிப்படுத்தலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை எட்டிப் பார்க்க வைக்கின்றன. ”படைப்புகளில் நாலும் இருக்க வேண்டும். அதுவும், நறுக்குன்னு இருக்க வேண்டும்” என என் தமிழ் பேராசிரியர் சொன்னது நினவுக்கு வரும் விதமாக புனைவெழுத்தில் அடித்து ஆடி இருக்கிறார்.

Friday, 14 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 50

அத்தியாயம் – 50 

(சம்ஹார மூர்த்தி)

வெளிப்பட்ட எல்லா அத்தியாயங்களிலும் வசவுகளுக்கும், நக்கலுக்கும், நையாண்டிக்கும், ஏமாற்றத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்து அழுது புலம்பிய கோவிந்தசாமி இந்த அத்தியாயத்தில் விஸ்வரூபம் எடுத்து ”சங்கி என்றால் சாணக்கியத்தனம்” என சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு இன்னொரு சாட்சியாகி இருக்கிறான். கடவுளை விட, பிரமனை விட தானே உயர்ந்தவன். தன் படைப்புகள் அனைத்தும் ”தோன்றின் புகழோடு தோன்றுபவை” என காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு திரிந்த சூனியனை அவன் உருவாக்கிய பாத்திரங்களே குழப்பியடிக்கின்றன. ஒரு கட்டத்தில் ”பைத்தியம் பிடிக்க வச்சுராதீங்கடா” என வடிவேலுவைப் போல புலம்ப ஆரம்பிக்கிறான்.

தனக்கு கிடைக்க இருந்த பதவிக்கு வேட்டு வைத்த கோவிந்தசாமியின் உச்சகட்ட ஆக்‌ஷனில் சாகரிகாவும், தன் படைப்புகளின் அடாவடிகளால் சூனியனியும் திகைத்துப் போகின்றனர். சூனியனுக்கான கிரிடிட்டை சாகரிகா கேட்டதும் அந்த திகைப்பும் கரைந்து போய்விடுகிறது.  ஒருவழியாக எல்லா குழப்பங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு ”சாகரிகா கோவிந்தசாமி ரசிகர் வட்ட” சமஸ்தானத்திற்குள் நுழைய வருபவர்களை கோவிந்தசாமியின் நிழல் வரவேற்கிறது. நிழலும், நிஜமும் இணைந்து அனைவருக்கும் வேட்டு வைக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டு வாசித்தால் கோவிந்தசாமி நம் நினைப்பை பொய்யாக்கி விடுகிறான். அடியோடு அழிப்பது என முடிவெடுத்தபின் நிழலுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

Monday, 10 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 49

அத்தியாயம் – 49

 (நூறாயிரம் நான்கள்)

வழக்கம் போல சூனியன் தன் புகழை நீட்டி முழங்குவதில் அத்தியாயம் நகர்கிறது. இதுவரையிலும் வெண்பலகையில் போரிட்டுக் கொண்டிருந்தவர்கள் நேரடியாக சந்தித்துக் கொண்டு களமாடினால் அது இன்னொரு சுவராசியம் என நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கோவிந்தசாமியின் செயல்பாடுகள் குறித்து தன் கதாபாத்திரம் வழி அறியும் சூனியன் குழம்பிப் போகிறான். அவனின் படைப்புகள் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன. தான் திட்டமிட்ட படி எதுவும் நடக்காததால் கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறான்.

சித்தாந்தங்களின் அடையாளத்தில் தன் படைப்புகள் பிரசவித்திருந்ததால் குழப்பம் விளைவிப்பவர்களை ஒழித்துக் கட்ட எல்லா சித்தாந்தவாதிகளும் கட்சிக்குள் குழப்பம் விளைப்போரை போட்டுத் தள்ள சொல்லும் யோசனையை சூனியனும் ஏற்கிறான். பூகம்பச்சங்கைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறான். அழிவுக்கான ஆயுதங்களாக அவனுடைய கதாபத்திரங்கள் இல்லாத்து ஏமாற்றம் என்ற போதும் பூகம்பச்சங்கு எதற்கு? என்ற விடை கிடைத்திருக்கிறது. சூனியன் எங்கு, எப்போது, எப்படி காவு வாங்கப் போகிறான்? அவனுடைய கணக்கில் கோவிந்தசாமியோடு வேறு யாரெல்லாம் இருப்பார்கள்? என்பதை அறிய கடைசி அத்தியாயத்திற்காக காத்திருப்போம்.

Saturday, 8 January 2022

”படைப்பாளியின் கையெழுத்து” எனும் வடிவ பொக்கிஷம்!

சமீபத்தில் வாங்கிய புத்தகங்களில் அதன் படைப்பாளர் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார். அதைப் பார்த்த என் மனைவி இவர் உங்க நண்பரா? அதான் கையெழுத்திட்டு கொடுத்திருக்காரா? இலவசமா கொடுத்ததா? என கேட்டாள். இலவசமா கொடுத்தா தான் கையெழுத்து போட்டு தரனுமா? என்றேன். அது தானே வழக்கம் என்றாள். யோசித்து பார்க்கையில் அந்த வழக்கம் பழக்கமாக இல்லாது வழக்கொழிந்து போய் விட்டது என்பதை அவளுக்கு சொன்னபோதும் ஒரு படைப்பாளியின் கையெழுத்து “இனாம்” - க்கு உரித்தானது மட்டும் தானா? என்ற கேள்வி என்னைக் கிளறிய படியே இருந்தது.

படைப்பாளிக்கு தான் நெருக்கமானவர் அல்லது தனக்கு படைப்பாளி நெருக்கமானவர் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவோ, “மாஸ்” காட்டுவதற்கோ படைப்பாளிகளிடமிருந்து பெறும் கையெழுத்தை நம்மில் பலரும் பயன்படுத்துகிறோம். அதனாலயே அதை வெறும் கையெழுத்தாக மட்டுமே பார்க்கிறோம். உண்மையில் அது வெறும் கையெழுத்தல்ல. அது ஒரு வடிவம். ”கையெழுத்து வடிவம்”. கையெழுத்திட்டு தரும் படைப்பாளி சமகாலத்தவராய் இருப்பது, குழுமனப்பான்மையோடு அவர்கள் சார்ந்து செய்யப்படும் எதிர்வினைகள் ஆகியவைகளால் அந்த வடிவ சேமிப்பை நாம் புறந்தள்ளி விடுகிறோம்.

Thursday, 6 January 2022

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 48

அத்தியாயம் – 48

(சாதாகவியும், மகாகவியும்)

தன்னை கதாபாத்திரம் என்று சூனியன் கூறியதால் விசனமடைந்து கோபமடைந்திருந்த கோவிந்தசாமி அது காதல் மனதுக்கு சரிபடாது என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வதோடு காதலுக்கும், காமத்திற்கும் பெண்களின் விருப்பத்திற்குரியவனாக, கவிதையில் பாரதிக்குப் பிந்தைய மகத்தான கவிஞனாக தான் இருப்பதாக தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்கிறான்.

ஷில்பா சாகரிகாவிடம் கோவிந்தசாமியைச் சந்தித்த விபரத்தைக் கூறுகிறாள். நிழலை வைத்து நிஜத்தை போட்டுத் தள்ள தான் செய்திருக்கும் ஏற்பாட்டை சாகரிகா கூறுகிறாள். சூனியன் கோவிந்தசாமியிடம் சொன்னதைப் போல ஷில்பாவும் நீயும், பா.ரா.வும் என்னுடைய கதாபாத்திரங்கள் என்று கூறியதைக் சாகரிகா கோபம் கொள்கிறாள். புதிய சமஸ்தானத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்த கையோடு இரவுராணி மலரை ஏந்தி சாகரிகாவை சந்திக்கும் கோவிந்தசாமி கெஞ்சி, உருகி அவளிடம் மலரைக் கொடுத்ததோடு அதை நுகர்ந்து பார்க்கவும் வைத்து விடுகிறான்.