Monday, 18 March 2019

அபி ஆல்பம் - 03

மகன் அபிலேஷின் முதல் முயற்சி தினத்தந்தி “மாணவர் ஸ்பெஷல்’ பகுதியில்









Tuesday, 19 February 2019

ஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.

“இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்று மகாத்மா காந்தியடிகளால் புகழப்பட்டவர் உ.வே.சா. உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்த உ.வே.சா அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடராமன். ஆனால் அப்பெயரை அவரின் பெற்றோர்களே பயன்படுத்தவில்லை. சாமிநாதன் என்று பெயரிட்டு அழைத்தனர். நண்பர்களோ ”சாமா” என்றழைத்தனர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணிய சாமிநாதன் என்ற அவருடைய முழுப்பெயர் பின்னர் உ.வே.சா. என்றானது.

தன் வாழ்நாள் முழுக்க ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து அதைப் பதிப்பிக்க உ.வே.சா. ஒரு போதும் வருந்தியதில்லை. அதைத் தன் வாழ்நாள் பணியாகவே செய்தார். அவருடைய அந்திமகாலத்திற்குச் சில மாதங்களுக்கு முன், ”உங்களுக்கு மறுபிறவி வாய்த்தால் என்ன செய்வீர்கள்?” என ஒரு பத்திரிக்கை துணையாசிரியர் கேட்டார்.

Monday, 18 February 2019

பொய்த்துப் போகும் அனுமானங்கள்!

நேற்று சகோதரனின் வீடு குடியேறும் நிகழ்வு இருந்தது. நிகழ்வில் உறவினர்கள் வருகை இருக்கும் என்பதால் மற்ற குழந்தைகளோடு அவனும் இருக்கட்டும் என அப்பாவும், அம்மாவும் சொன்னார்கள். 

சில தினங்களுக்கு முன் கடும் வயிற்றுப் பிரச்சனைக்காக மருத்துவக் கண்காணிப்பில் இருந்திருந்தான். 

இதனால் நேற்று (17.02.2019) தினமணி நாளிதழோடு இணைந்து பரமக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே டோர்னமென்டிற்கு மகனை அனுப்ப வேண்டாம் என நினைத்திருந்தேன். என் அபிப்ராயத்தை அவனிடம் சொ்ன்னேன்.

"அதுலாம் பிரச்சனை இல்லை டாடி. கலந்துக்கலாம். அப்புறம் உங்க இஷ்டம்" எனச் சொல்லி விட்டு பள்ளிக்கூடம் போய் விட்டான்.