Wednesday, 4 September 2013

மரமும் மனிதனும்


எப்படியெல்லாம்
உருமாறுகின்றேன்
என்றது மரம்

அப்படியெல்லாம்
உருமாற்றியது நான்
என்றான் மனிதன்

நூற்றாண்டுகளாய்
உருமாற்றியே
பரிணாமம் கண்டவனிடம்
விவாதிக்க என்ன இருக்கிறது.

மெளனமாய் தலையசைத்தது மரம்