Showing posts with label துளிப்பா. Show all posts
Showing posts with label துளிப்பா. Show all posts

Thursday, 10 April 2014

துளிப்பாக்கள்

வனப்பில் நின்று

வறுமையைக் காட்டுகின்றன 
அலமாரி அங்கீகாரங்கள்

நன்றி : சஞ்சிகை

Tuesday, 4 February 2014

துளிப்பாக்கள்

கர்ப்பகிரகத்திற்குள் இருப்பவனும் சாமி
கற்பூரம் காட்டுபவனும் சாமி
முட்டாளாய் பக்தன்!

  •  

யாருக்கு முதல் பரிவட்டம்
முட்டிக்கொண்ட பங்காளிகள்
இரசித்தபடி கடவுள்.


தீயில் குளித்தாள்
தீயால் குளிக்க வைத்தாள்
கணவனின் கறை போக்க.


நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர்

Wednesday, 6 November 2013

துளிப்பாக்கள்

ஆயிரம் ஏக்கர் மடத்தில்
பகட்டாய் தொடங்கியது
பற்றற்று இருவகுப்பு.

-------------------------------------------
வாங்கியவனும்
கொடுத்தவனும் காத்திருக்கிறார்கள்
சம்பள தேதி.
-----------------------------------------

நன்றி : காற்றுவெளி 

Tuesday, 5 November 2013

துளிப்பாக்கள்

காளைகளுமில்லை
கழனிப்பானையுமில்லை
கதிர் அறுக்கும் கருவி.
--------------------------------------------
வார்த்தையற்ற மொழியில்
தோற்றுப்போனது வயது.
தாத்தாவும்,பேரனும்!
-------------------------------------
சலனப்படுத்தாமல்
கடந்து போங்கள்
படுக்கையறை.
-------------------------------------
எழுவதற்காக விழு
நித்தமும் தன்னம்பிக்கை.
சூரியன்
----------------------------------

நன்றி : சஞ்சிகை

Friday, 1 November 2013

துளிப்பாக்கள்

அவதார நம்பிக்கைகளில்
ஆணியடிக்கப்பட்ட மக்கள்
ஆசிரமத்தில் சாமி!
-------------------------------------------
கவலையில் கிடந்தான்
ஆபரணங்களில் மொய் வாங்கியவன்
பணமதிப்பு வீழ்ச்சி
-------------------------------------------
கொதித்தெழுந்தான் கடவுள்
சரிந்து விழுந்தன கலசங்கள்
குவியும் கோரிக்கைகள்
--------------------------------------------

நன்றி : முத்துக்கமலம்