வர்ணங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம்
அகம் புரளும் உன் உணர்வுகளை
நீ பகிர்ந்து கொண்ட
சந்தோச தினமொன்றில்
ஏழு வர்ண உள்ளாடைகளை
பரிசு பொதியாக்கி
உன் கைக்குள் திணித்தேன்.
நனைந்த பின் அவிழ்த்தெறியும் ஆடை
ஏழு வர்ணத்தில் எதற்கென?
செல்லச் சிணுங்கலோடு வாங்கிக் கொண்டாய்
பின்னொரு நாளில்
நீயும்,நானும் வார்த்தைகளற்றவர்களான போது மீளவும்
உன்னைப் பரிமாற தொடங்கியிருந்தாய் எனக்கு
அசைந்தவாறே காற்றில் வர்ணமற்று
உலர்ந்து கொண்டிருக்கும்
உனது உள்ளாடை வாயிலாக.
உனது உள்ளாடை வாயிலாக.