Wednesday, 23 December 2015

தையல் மிஷின்

ஜானகி என்ற பெண்ணிற்கும் அவளோடு முப்பத்தைந்து ஆண்டுகள் இணைந்து பயணித்த தையல் மிஷினுக்குமான உறவைச் சொல்லும் கதை. தையல்மிஷின் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் நூர்ஜஹான் சுலைமான்.

ஜானகியின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சற்றும் மிகைப்படுத்தாத வகையில்மிஷின் மக்கர் பண்னும் போது குழந்தையை அதட்டுவது போல செல்லமாக அதட்டிய படி தைக்க ஆரம்பிப்பாள்போன்ற நுட்பமான அவதானிப்புகளோடு இழைத்திருப்பது கதையின் மிகப்பெரிய பலம்.

Saturday, 19 December 2015

அப்பாவின் படகு

 

சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் கடந்த வருட தனது வாசகர் வட்டச் சிறுகதைகளைஅப்பாவின் படகுஎன்ற பெயரில் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறது. இத்தொகுப்பில் பத்துப் படைப்பாளிகளின் பதினைந்து கதைகள் உள்ளன,

ஒரு படைப்பை வாசிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கும் வாசகன் அதில் தொடர்ந்து பயணிக்க அப்படைப்பானது அவனைத் தன்னுள் இறுத்திக் கொள்ளும் தகவமைப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வலக்கையால் எடுத்ததை இடக்கையால் புறந்தள்ளிப் போய் விடுவான். வாசிப்பாளனின் இந்தப் புறந்தள்ளலை, புறக்கணித்தலை எப்பொழுது ஒரு படைப்பு புறந்தள்ள வைக்கிறதோ அப்பொழுது அந்தப் படைப்பு வெற்றியின் முகத்துவாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இப்படி நிலை நிறுத்தல்களுக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் படைப்பாக இத்தொகுப்பின் கதைகள் சிங்கப்பூரின் வாழ்வியல் சார்ந்தும், சிங்கப்பூரைக் களமாகக் காட்டியும் விரிந்து நிற்கின்றன.

Sunday, 13 December 2015

குழந்தைகளின் மீதான வன்முறை!

மகனும், மகளும் ஒரே பள்ளியில் பயில்கிறார்கள். மகளுக்குச் சொல்லிக் கொடுத்த, கொடுக்கின்ற ஆசிரியர்களே மகனுக்கும் பாட ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதனால் மகளின் செயல்பாடுகளோடு மகனின் செயல்பாட்டை ஒப்பீடு செய்து பார்ப்பது அவர்களுக்கு எளிதான விசயமாக அமைந்து விடுகிறது. ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பிற்குப் பள்ளிக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் மனைவியின் பேச்சில் இதன் தாக்கம் தெரியும்.

உன்னை மாதிரி உன் தம்பி இல்லைஎன மிஸ் சொன்னதாய் மகள் சொல்லும் போதெல்லாம், ”ஏன் உன்னையைப் போல இருக்க வேண்டும்? அப்படி அவன் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லைஎனச் சொல்லி விட்டு மகனிடம்உனக்கு என்ன முடியுமோ? அதை மட்டும் செய். ஆனால் சரியாகச் செய். அது போதும்என்பேன். இப்படியான ஒப்பீடுகள் அவனை அறியாமலே அவனுக்குள் ஒருவித தாழ்வுணர்ச்சியைக் கொடுத்து விடுமோ? என்ற அச்சத்தில் அதற்கான வழிகளை ஒவ்வொருமுறையும் அடைத்துக் கொண்டே வரும் போதெல்லாம் ஏதோ ஒரு ரூபத்தில் அது புதிதாய் முளைத்து விடுகிறது