Tuesday 5 December 2017

காலபைரவரின் அனுமதி இருக்கா?


நவக்கிரக வழிபாட்டை முடித்த பின் நேராக இராமேஸ்வரம் போய் இறங்கி விடக் கூடாது. இராமேஸ்வரத்திற்குள் நுழையும் முன் காவல் தெய்வமாக பாம்பனில் இருக்கும் பைரவரிடம் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறா விட்டாலும் நிகழும் என்ன நிகழும்
  
இராவண வதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவபூஜை செய்ய இராம நினைத்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரச் சொல்லி அனுமனை அனுப்பி வைத்தார். லிங்கத்தை தேடி வானில் பறந்தவர் காசி எல்லைக்குள் நுழைந்தார். சிவபூஜைக்கு வேண்டிய சுயம்பு லிங்கத்தை தேடி வந்தவருக்கு காசி முழுக்க லிங்கங்களாய் இருப்பது தெரிந்தது. இதில் எது சுயம்பு லிங்கம் என அவரால் அடையாளம் காண முடியவில்லை. களவாடியோ, கவர்ந்தோ போக வந்த அனுமனுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. கருடன் ஒரு லிங்கத்தை மட்டும் தன் பங்குக்கு வட்டமிட்டுக் காட்ட பல்லியோ அந்த லிங்கத்தின் மீது அமர்ந்து வாலாட்டிக் காட்ட சுயம்பு லிங்கத்தை அடையாளம் கண்டு கொண்ட அனுமன் ஆனந்தமடைந்தார். தன் பலம் பொருந்திய கரங்களால் அந்த லிங்கத்தை தூக்க முயன்றார்

அதுவரையிலும் அமைதியாய் இருந்த காலபைரவர் அனுமன் முன் வந்து நின்றார்யாரைக் கேட்டு என் எல்லைக்குள் நுழைந்தாய்? நுழைந்ததோடு இல்லாமல் இந்த லிங்கத்தை யாரைக் கேட்டு எடுக்க முயற்சித்தாய்? இத்தனை லிங்கங்கள் இருக்கும் போது இந்த சுயம்பு லிங்கத்தை உனக்கு அடையாளம் காட்டியது யார்? என அடுக்கடுக்கான வேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தார். அனுமனும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். காலபைரவரிடம் எதுவும் பலிக்கவில்லை. என் கேள்விகளுக்கு விடை சொல்லாமல் உன்னால் இங்கிருந்து செல்ல முடியாது என தடை உத்தரவு போட்டார். அனுமனும் விடுவதாய் இல்லை. வாய்ச் சண்டை கைச் சண்டையாகும் சூழலில் தேவர்கள் தலையிட்டு விபரம் சொல்லி அனுமனை சுயம்பு லிங்கத்தோடு அனுப்பி வைத்தனர். தேவர்களுக்காக அனுமனை அனுப்ப சம்மதித்த காலபைரவர் சும்மா இருந்து விடவில்லை. என் அனுமதியின்றி நுழைந்தவனுக்கு உதவி செய்தவர்கள் யார்? என விசாரிக்க ஆரம்பித்தார். கருடனும், பல்லியும் என தெரிய வர தன் எல்லைக்குள் இனி கருடன் பறக்கக் கூடாது. பல்லி கத்தக் கூடாது என தடை உத்தரவுகளை பிறப்பித்தார். ஆளானப்பட்ட அனுமனுக்கே இந்த நிலை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? அதனால் தான் இராமேஸ்வரத்திற்குள் நுழையும் முன் அதன் காவல் தெய்வமான காலபைரவரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இறை நியதியை மதித்து இராமரும் காலபைரவரை வணங்கி அனுமதியும், ஆசியும் பெற்ற பின்பே இராமேஸ்வரம் சென்றார்.

தேவிபட்டணத்தில் இருந்து இராமநாதபுரம் வழியாக பாம்பனுக்கு வர இப்போது கடல் மேல் அமைந்த இரயில் பாலம், சாலைப் பாலம் இரண்டும் இருக்கிறது. முன்பு இந்த வசதிகள் இல்லை. இப்போது இருக்கும் பாம்பன் கடற்கரை ஒரு ஓடையாக இருந்திருக்கிறது. முன்பு பாம்பன் இராமேஸ்வரத்தோடு இணைந்தே இருந்திருக்கிறது. பாம்பனின் ஒரு கரையில் வந்து இறங்கி ஓடம் மூலமாக மறுகரையில் ஏறி அதன் பின் இராமேஸ்வரம் சென்று வந்துள்ளனர். இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் தினமும் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமியை இவ்வாறே வழி பட்டு வந்தததற்கான குறிப்புகள் வரலாற்று நூல்களில் காணக்கிடைக்கின்றன. அக்காலத்தில் பாம்பனில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலைமங்கம்மாள் சாலைஎன்றழைக்கப்பட்டது. இப்போது அது தேசிய நெடுஞ்சாலை என்றழைக்கப்படுகிறது.

பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில அடி தூரத்தில் இருக்கும் இக்கோவிலுக்கு நடந்தே சென்று விட முடியும். ஆரம்பத்தில் இவ்வூர்பாம்படைஎன்றே அழைக்கப்பட்டது. பின்னர் மருவிபாம்பன்என்றானது. இந்த பைரவர் கோவிலை ஒட்டி ஒரு புறம் பைரவ தீர்த்தமும், இன்னொரு புறம் கபி தீர்த்தமும் உள்ளது.

வானரங்கள் இராவண யுத்தத்தின்  போது தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கபி தீர்த்தத்தில் நீராடி நீக்கிக் கொண்டதால் ரண விமோசனம் தீர்த்தம் என இத்தீர்த்தம் அழைக்கப்படுகிறது. தவிர, 64,000 வருடங்கள் ஒருவன் தவம் செய்தால் உண்டாகும் பலன் ஒருநாள் கங்கையில் நீராடுவதால் கிடைக்கும். அப்படி ஆயிரம் தடவை நீராடும் போது கிடைக்கும் பலன் அவன் சிம்ம ராசியில் குரு வரும்போது கோமதி நதியில் ஒரு முறை நீராடினால் கிடைக்கும். இத்தகைய கோமதி நதியில் பலமுறை நீராடுவதற்கு சமமான பலனை ஒருமுறை மட்டும் நீராடினாலே தந்து விடக்கூடியதுகபி தீர்த்தம்”. இத்தீர்த்தத்திற்கு அருகிலேயே தங்கிச் செல்ல ஒரு சத்திரமும் உண்டு.

அக்காலத்தில் இப்பைரவரை இலங்கையில் இருந்து வந்து வழிபட்டு சென்றுள்ளனர். அப்படி வழிபட வந்தவர்களால் கொண்டு வரப்பட்ட முருகன் சிலை பைரவர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. முருகனுக்கு நடைபெறும் பல்வேறு விழாக்களால் இம்முருகன் ஆலயம் பிரபலமடைய பைரவர் ஆலயம் முருகன் ஆலயம் என்ற பெயராலயே தற்போது அழைக்கப்படுகிறது.

முருகருக்கும், பைரவருக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. பைரவர் ஆலயம் பழைமை மாறாத வகையில் தனி சந்நிதியில் அமைந்துள்ளது. இராமேஸ்வரத்தின் காவல் தெய்வம் என்பதைக் குறிக்கும் முகமாக காலபைரவர் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்தில் வீற்றிருக்கிறார். பைரவ, கபி தீர்த்தத்தில் நீராடி பைரவரை வணங்கி விடைபெற்ற பின் செல்ல வேண்டிய தலம்தனுஷ்கோடி

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்

No comments:

Post a Comment