கரும்பை கடித்துத் தின்னும்
திராணி இழந்தோம்.
பனைகளை சூலைகளுக்குத் தநது விட்டு
கிழங்குகளுக்கு
அழைந்தோம்.
மஞ்சள் கிழங்கின் உரிமையை மாற்றான்
உரிமை கொண்டாடும் வரை
உறங்கினோம்.
வயலோர பொங்கல் பூவைப்
பொக்கைப் பூவாக்கி வாங்கி
வந்தோம்.
உணவிட்டவனின் வயிற்றுப்பசிக்கு
வயல் எலிகளைக் கொடுத்தோம்.
வீரம் போற்றும் விளையாட்டை நடத்த
நீதிமன்ற படிகளில் காத்திருந்தோம்.
பழையன கழிதல் என
பொங்கலை அழுக்காக்கினோம்.
இருந்து விட்டுப் போகட்டுமே என
நீ சொல்கிறாய்.
நானும் ஆமோதிக்கிறேன்
"பொங்கல் நல்வாழ்த்துகள்" என்ற ஒற்றை வரியோடு!
ஆதங்கம் வருத்தம் தருகிறது ஆயினும்
ReplyDeleteஇதுதானே நிதர்சனம்...
இனிய உழவர் தின வாழ்த்துகள்...
ReplyDelete