Showing posts with label சலனக் கிரீடம். Show all posts
Showing posts with label சலனக் கிரீடம். Show all posts

Friday, 20 January 2017

”மின்னூல்” எனும் கனவு!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மலைகள் இதழின் ஆசிரியரும், நண்பருமான சிபிச்செல்வன்கிண்டில்பற்றிக் கேட்ட போது அப்படின்னா என்ன? எனக் கேட்டேன். புத்தகங்களை எப்படி படிக்கிறீங்க? என அடுத்த கேள்வியை வீசினார். சம்பந்தமில்லாத கேள்வியா கேட்கிறாரே என நினைத்துக் கொண்டு நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசிக்கிறேன் என்றேன். அந்த பதிலில் என் நவீனத்தின் ஞானத்தை அவர் கண்டுபிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். “கிண்டில்பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் சொன்னார். சிங்கப்பூரில் இருந்து கொண்டு இத்தனை ஞானசூன்யமா இருந்திருக்கோமேடா!  என நினைத்துக் கொண்டு இணையத்தில் அறிந்து கொள்ள முனைந்ததில் மின்னூலின் அவசியம் குறித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகு மின்னூல் சார்ந்து இருந்து வந்த பிரமிப்பு விலக ஆரம்பித்தது.

Sunday, 1 May 2016

சலனக் கிரீடம்

"சலனக் கிரீடம்" மின் நூலில் "மூன்றடி ஆரவாரங்கள் " என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள மூன்றடிகளுக்கு கவிஞர் இரா.இரவி எழுதி உள்ள அணிந்துரை -

-----------------------------------------------------------------------------------

நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி அவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருபவர் .இவரை நேரில் சந்தித்தது இல்லை. இவரது படைப்புகளை தமிழ் ஆதர்ஸ் டாட் காம் இணையம் உள்ளிட்ட பல்வேறு இணையங்களில், இதழ்களில் படித்து இருக்கிறேன்அவரும் என் படைப்புகளை படித்து இருக்கிறார்அலைபேசி வழி தொடர்பு கொண்டு அணிந்துரை வேண்டினார்எழுதி உள்ளேன்ஹைக்கூ கவிதை படைக்கும் ஆற்றல் இன்று உலக அளவில் பரவி விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல் .

சலனக்கிரீடம் என்ற நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. மலர்க்கிரீடம், முள் கிரீடம் கேள்விப்பட்டு இருக்கிறோம். சலனக்கிரீடம்  இப்போதுதான் கேள்விப்படுகிறோம்புதிய சொல்லாட்சி பாராட்டுக்கள். மூன்றடிகளில் ஒரு ஆரவாரம் என்பது முற்றிலும் உண்மை.

Wednesday, 30 March 2016

சலனக்கிரீடம்

மாறுபட்ட சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், தாக்கங்களில், வாழ்வியல் நெருக்கடிகளில் என்னைச் சலனப்படுத்திய விசயங்களே கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக இல்லாமல் இருப்பதும்உங்களின் அனுபவங்களை இந்தக் கவிதைகளின் வழியாக நீங்களும் நீட்டிப் பார்க்க முடியும் என்பதும் இத்தொகுப்பின் பலம் என நினைக்கிறேன்

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் வெளியானவைகள்