Thursday, 20 June 2019

மாத்தனும் - இல்லைன்னா - மாறனும்!

   மகளுடனான உரையாடலின் இடையே இந்த வருடத்துக்கு ஏதும் ப்ளான் இருக்கா? என்றேன்.

"ஸ்கூல் லீடர் (SCHOOL LEADER) அல்லது ஹவுஸ் லீடர் (SCHOOL HOUSE LEADER) இரண்டில் ஒன்றை பெற்று விட வேண்டும்" என்றாள்

அது என்ன அத்தனை சிரமமா? என்றேன்.

எங்க ஸ்கூல்ல ஸ்கூல் லீடர், ஸ்கூல் ஹவுஸ் லீடரா இதுவரைக்கும் பாய்ஸ (BOYS) மட்டும் தான் போடுறாங்க. அசிஸ்டெண்ட் லீடரா மட்டும் தான் கேர்ள்ஸ (GIRLS) போடுறாங்க. கேர்ள்ஸ்ஸ லீடரா செலெக்ட் செஞ்சா அச்சிவ் பண்ண முடியாதுன்னு நினைக்கிறாங்களா? என்றாள்.

இதை நீ ஸ்கூல்ல கேட்க வேண்டியது தானே என்றேன்.

வாய்ப்பே தராத போது நான் பொறுப்பேற்கவான்னு எப்படி நாங்களா கேட்க முடியும்? என்றாள்.