Saturday 1 February 2020

மெளன அழுகை - 8

தன் முகநூல் பக்கத்தில் என்மெளன அழுகைநூல் குறித்துவைசாலி செல்வம்எழுதியுள்ள அறிமுக உரை

முகநூல் வழியாக கிடைத்த நண்பர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தாண்டு பரிசாக எனது இல்லம் தேடி அனுப்பட்ட அன்பு பரிசு.. வீடு மாற்றத்தால் கண்ணில் படாமல் போன சில வாசிப்பு நூல்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு அலமாரியை தூர்வாரிய போது சிக்கிய நூலை இன்று காலை தான் படிக்க அமர்ந்தேன். ஒரு நூல் வாசிப்பு என்பது ஆசிரியரோடு நாமும் அந்த களத்தில் தன்னை மறந்து வசிக்கும் வாழும் தருணங்கள் ஆகும். சில நேரங்களில் அந்த உணர்வு நமக்கும் நிகழ்ந்திருக்கும். அதுபோலவே உணர்ந்தேன் சில இடங்களில். இது கவிதைத் தொகுப்பு நூல்.  

 
கவிதை பெரும்பாலும் கவிஞர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு வித்தையான சிந்தனை. மரபுக் கவிதைகள் கடந்து புதுக் கவிதை காலத்தில் எல்லாமே பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது. எழுத்துக்களும் சரி பேச்சுக்களும் சரி. இந்நூலில் கவிஞரின் எண்ண அலைகளில் எனது மனமும் அலை பாய்ந்து அக்காட்சிக்குள் சென்று வந்தது. பெண்மை குறித்த கவிதைகளில் குறிப்பாக வேட்கை தணித்த தருணம், உருமாறும் வசவுகள், கதைகள் கேட்டு வளர்ந்தவள், ஊனமான ஆண்மை போன்ற தலைப்புகளில் இடம்பெற்ற கவிதைகள் இரசிக்க மட்டமில்லாமல் சற்று வாழ்ந்து பார்த்த தருணங்களாக இருந்தது.. மேலும் மௌன அஞ்சலி கவிதை மனிதாபிமானம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது

முகநூல் வழியாக கிடைத்த நட்பு.. நேரில் பார்த்து இல்லை.. எதிர்பாராத பரிசு. இந்த ஆண்டு படித்து விட்டேன். காலதாமதமான நூல் விமர்சனம் வருந்துகிறேன்.. ஆனாலும் மகிழ்வாக இருக்கிறேன் முழு புத்தகத்தையும் படித்த திருப்தியில் நான்..



1 comment:

  1. அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா. தங்களின் நூலின் துவக்கம் இன்றுவரை 8 நூல்கள் வரை படித்து முடித்து விட்ட நிறைவில் இருக்கிறேன் ஐயா. நன்றி.

    ReplyDelete