ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு tamilinbam.com கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியது.
மகனின் ஆசிரியை தகவல் அனுப்பியதும் என்னிடம் ஆலோசனை கேட்டான். கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்ததும் இணையத்தில் இருந்து அதற்கான தரவுகளை எடுக்கச் சொன்னேன். அந்தத் தரவுகளை எப்படி கவிதையாக்கலாம்? என வழிகாட்டலைக் கொடுத்தேன்.
சில வழிகாட்டுதல்கள் வழி அவன் எழுதிய கவிதை அந்த இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. உரைநடையைக் கவிதையாக்கி பார்க்கும் சாத்தியத்தை இந்தப் பயிற்சி அவனுக்கு அளித்திருக்கும் என்று தோன்றுகிறது.
மரம் நடு……மனம் தொடு
தோழா…தோழா
கொஞ்சம் செவி கொடு தோழா.
மழை இல்லையென
தவம் செய்தால் வருமா?
ஆக்சிஜன் இல்லையென
புலம்பினால் கிடைக்குமா?
நிலத்தடிநீர் இல்லையென
கண்ணீர் விட்டால் ஊறுமா?
சுவாசமே மாசாயிற்றென
மனமுடைந்தால் சுத்தமாகுமா?
நிழலே இல்லையென
பழித்தால் சூடு தணியுமா?
நுரையீரல் அசுத்தமாயிற்றென
மருத்துவமனை சென்றால் சுத்தமாகுமா?
இந்தக் கேள்விகளெல்லாம்
இல்லாமல் போக
வழியொன்று உண்டு!
அதற்கு
மரம் நடு…… தோழா…..மரம் நடு.
மரத்தை நேசித்து
இயற்கையைச் சுவாசித்து
வாழ்வை இனிதாக்கி
பிறர் மனம் தொடு.
- கோ. அபிலேஷ்
ஒன்பதாம் வகுப்பு / வேலுமாணிக்கம் பதின்ம மேல்நிலைப்பள்ளி
இராமநாதபுரம்.
No comments:
Post a Comment