Showing posts with label நம்பிக்கை வாசல் மாத இதழ். Show all posts
Showing posts with label நம்பிக்கை வாசல் மாத இதழ். Show all posts

Friday, 17 October 2014

முயலாமையை முடக்குங்கள்

”காரணம் சொல்பவர்கள் காரியம் செய்வதில்லை” என்பது ஒரு வழக்குச்சொல் மட்டுமல்ல பொருள் பொதிந்த வாழ்வியல் சொல்லும் கூட! பள்ளிப் பருவத்தில் வீட்டுப்பாடம் செய்யாததற்கும், வேலைக்குச் சென்ற சமயங்களில் கூடுதல் விடுப்பு எடுப்பதற்கும் காரனங்களைச் சொல்லிச் சொல்லி பழகிவந்த நம்மில் பலருக்கும் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியமாகி விட்டது. அதனால் தான் சிலர் மட்டும் சாதிக்கின்றனர். வெற்றியாளர்களாக உருவாகின்றனர்.

என்ன வேண்டும் என்பதை விட என்ன வேண்டாம் என சொல்லவே நாம் பழகி வருகிறோம். பழகி விட்டோம். வெளிநாடுகளில் நம் நாடுகளிலிருந்து நேரடியாக நிர்வாகத்துறை பணிக்கு வருகின்றவர்களைப் பற்றி அங்குள்ளவர்கள் கிடைக்கும் பயன்களை விட அதனால் வரும் விளைவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுபவர்கள் என்று கமெண்ட் அடிப்பார்கள். இது முற்றிலும் உண்மை என கூற முடியாவிட்டாலும் இதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இதை நான் பணிபுரிந்த நிறுவனங்களில் கண்கூடாக கண்டிருக்கிறேன். நிறுவனம் நடத்தும் ஊழியர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களில் நம்மவர்கள் இருந்தால் செய்யுங்கள் என்று முதலில் சொல்ல மாட்டார்கள். நீங்க செய்யப்போகிற இந்த விசயத்தால் கட்டாயம் இது போன்ற எதிர் விளைவுகள் வரலாம் என்று தான் ஆரம்பிப்பார்கள்.

Wednesday, 12 February 2014

பாராட்டின் பலம்

என் முதல் நூலை வெளியீடு செய்ததோடு மட்டுமில்லாமல் என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியவரும், வணிகரீதியில் என் முதல் பதிப்பாளருமான திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் மணிவிழா சிறப்பிதழலில் அன்பின் அடையாளமாய் நான் எழுதிய கட்டுரை.

லேனா தமிழ்வாணன் சாரை முதன் முதலில் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். ஒரே நேரத்தில் தொண்டையை அடைக்கும் துக்கமும், பீறிட்டு வெளிக் கிளம்பும் சந்தோசமும் கலந்து ஒரு காக்டெயிலாய் எனக்குள் அந்த சந்திப்பு ததும்பி நிற்கிறது. அதனால் தான் ஆண்டுகள் பலவாகியும் அதன் ஈரம் இன்னும் காயாமல் என்னுள் இருக்கிறது.

என்னுடைய நான்கு நூல்களை மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டிருந்த சூழலில் துபாயில் தமிழ் அமைப்பு ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த லேனா சாரை சந்திக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. ரவி தமிழ்வாணன் சார் தான் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு, என் “இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்” என்ற நூலை லேனாசாரின் கரங்களால் விழா மேடையில் வெளியிட ஏற்பாடும் செய்திருந்தார். அப்பொழுது நான் துபாயில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள “அல்- அய்ன்” என்ற இடத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.