”காம்கேர்” நிறுவனர் காம்கேர்.புவனேஸ்வரி அவர்கள்
முகநூலில்
எழுதி வரும் பதிவு
”ஜம்முனு வாழ
காம்கேரின் OTP". நம் அன்றாட செயல்பாடுகள்,
நம்மைச் சுற்றி, நம்
வீட்டில் நிகழும்
நிகழ்வுகளில் இருந்து
கற்றுக் கொள்ளவும்,
கண்டுணரவும் இல்லாது
கடந்து விட்ட, கவனிக்கத்
தவறிய விசயங்களை
சுட்டியும், குட்டியும்
அவர் எழுதும்
பதிவுகளை அன்றாடம்
வாசிக்க இயலாத
போதும் நேரம்
கிடைக்கும் போதெல்லாம்
வாசித்து விடுவேன்.
பிள்ளைகளோடு செலவிடும் நேரங்களில் அவர்களுடன் பகிர்ந்து
கொள்வேன். ”பாடம்”,
”படிப்பினை”, ”அறிவுரை”
என எல்லா
தளங்களிலும் அந்த
பதிவுகள் விசயதானங்களை
வழங்கி இருக்கின்றன.
எனக்கு மட்டுமல்ல,
அவருடைய பதிவுகளை
வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அவ்வாறே
கிடைத்திருக்கின்றன என்பதற்கு
அவரின் ”காம்கேரின்OTP” பதிவுகளுக்கு வாசகர்களால் எழுதப்படும்
பின்னூட்டங்களே சாட்சி!
