”காம்கேர்” நிறுவனர் காம்கேர்.புவனேஸ்வரி அவர்கள் முகநூலில் எழுதி வரும் பதிவு ”ஜம்முனு வாழ காம்கேரின் OTP". நம் அன்றாட செயல்பாடுகள், நம்மைச் சுற்றி, நம் வீட்டில் நிகழும் நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும், கண்டுணரவும் இல்லாது கடந்து விட்ட, கவனிக்கத் தவறிய விசயங்களை சுட்டியும், குட்டியும் அவர் எழுதும் பதிவுகளை அன்றாடம் வாசிக்க இயலாத போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து விடுவேன்.
தன்னுடைய நேரமற்ற அலுவல் பணிகளுக்கிடையிலும் 2019ல் தொடங்கி நேரம் தவறாது வாசிப்பவர்களுக்கு சுவை குன்றாத வகையில் நீர்த்துப் போகாத செறிவுடன் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கும் மேலாக எழுதுவது என்பது எளிதல்ல. பொழுது போக்கையும், வெட்டி அரட்டைகளையும் மட்டுமே கொண்டிருக்கும் முகநூலில் இப்படியான பதிவு ஒரு நூறு என்பதே ஆச்சர்யம். அந்த ஆச்சர்யம் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி கம்பீரமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பெருமிதம் அவருக்கு மட்டுமேயானது என்ற போதும் அதன் கொண்டாட்ட மனநிலையில் வாசகர்களையும் தினமும் இழையோடச் செய்து வருகிறார்.
வாசகர்கள் எழுதும் கருத்துகளை சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்தோடு சிறப்பாக வடிவமைத்து தன் முகநூல் பக்கத்திலும், அவரது இணைய பக்கத்திலும் பகிர்ந்து கெளரவப்படுத்தி வருகிறார். இழையோடும் அந்த வாசக கெளரவத்தில் என் மகளுக்கும், எனக்கும் இடம் கிடைத்தது.
No comments:
Post a Comment