Monday, 17 September 2012

பரதேசி

ஊரில் உள்ள 
கடவுளையெல்லாம் வேண்டி
கண்ணீரோடு அம்மா

புத்தியோடு பிழை
கவனமாய் இரு
வழக்க வாசிப்போடு அப்பா

அடிக்கடி பேசு
யாரிடமும் சண்டைபோடாதே
அக்கறையோடு தங்கை

வார்த்தைகள் தேடும் மெளனத்தின்
பிரிவு துயரோடு மனைவி

எத்தனையாவது
படிக்கும் போது வருவீங்க
ஆவல் கேள்வியோடு மகள்

இத்தனையவும் கடந்து
நகர்ந்து போகின்றேன்
அக்கரை தேசத்திற்கு
பரதேசியாய்.

Thursday, 13 September 2012

வேண்டிய பலன் தரும் விரதங்களும் பண்டிகைகளும்


( வேண்டிய பலன் தரும் விரதங்களும் பண்டிகைகளும்  நூலுக்கு தினமலர்  நாளிதழில் வந்த விமர்சனம்)


நன்றி : தினமலர்

புரியாத புதிர்

உன் பிறந்தநாளுக்காக
வருடம் முழுவதும்
விறைத்து நிற்கின்ற
வார்த்தைகளும்
வாழ்த்து அட்டைகளும்
பரிசு பொருட்களும்

அப்படியான ஒருநாளில்
உன் கைக்குள் வந்தவுடன்
நிர்வாணமாகிப் போவதெப்படி?

Sunday, 9 September 2012

ஒரு கருவின் கதறல்


பாட்டில் எண்ணும் எழுத்தும் ஏற்றமிகு புரட்சியும்
காட்டு மனிதர்களின் சாதிப்படை மருந்தாய்
வேடிக்கை மனிதர்களின் வேடிக்கை விந்தையினை
வாடிக்கையாக்கும் சாக்கடை நாற்றந்தனை
போக்கப் பிறந்த பொன்மலரின் நாற்றம் இது.

சமுதாய்க் காழ்ச்சிந்தை சதிராடும் அரசியலின்
கையூட்டுக் கயமையைப் படம் போடும் புதுக்கவிதை                                                 
                       புலவர் கு.முனியாண்டி