Monday, 17 September 2012

பரதேசி

ஊரில் உள்ள 
கடவுளையெல்லாம் வேண்டி
கண்ணீரோடு அம்மா

புத்தியோடு பிழை
கவனமாய் இரு
வழக்க வாசிப்போடு அப்பா

அடிக்கடி பேசு
யாரிடமும் சண்டைபோடாதே
அக்கறையோடு தங்கை

வார்த்தைகள் தேடும் மெளனத்தின்
பிரிவு துயரோடு மனைவி

எத்தனையாவது
படிக்கும் போது வருவீங்க
ஆவல் கேள்வியோடு மகள்

இத்தனையவும் கடந்து
நகர்ந்து போகின்றேன்
அக்கரை தேசத்திற்கு
பரதேசியாய்.