வலைப்பதிவர் நா.முத்துநிலவன் அவர்கள் தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆரம்பித்து வைத்த அகல்விளக்கின் கனல் இன்று பல வலைப்பதிவர்களின் பக்கங்கள் வழியாக ஒரு தீபமாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. அறிந்த பதிவர்களை மீள் நினைவு கொணரவும், புதிய பதிவர்களை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும் அந்தத் தீப ஒளி பயன்பட்டு வந்தது – வருகிறது. அந்த வகையில் வலைப்பக்க எழுத்திற்குக் கத்துக்குட்டி என்ற வகையில் நான் வாசிக்கும் நண்பர்களின் வலைப்பக்கங்கள் குறித்து எழுதியதன் தொடர்ச்சியாய் முகவரிகளின் முகவரியின் இரண்டாம் பகுதி –
Friday, 8 April 2016
Thursday, 7 April 2016
Monday, 4 April 2016
உங்களின் முதல் அடையாளம்!
மரத்துக்கு வேரைப் போல, கட்டிடத்திற்கு அஸ்திவாரத்தைப் போல வெற்றி செயல்களுக்கு அஸ்திவாரமாய் இருக்ககூடியது ”முடிவெடுத்தல்”. முடிவெடுத்தல் என்ற அடையாளத்தின் மீது தான் மற்ற எல்லா தனித்த அடையாளங்களும் நிலைநிறுத்தப் படுகின்றன. எனவே முடிவெடுத்தலை உங்களின் முதல் அடையாளமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அது தான் வெற்றிப் பயணத்திற்கான முதல் படி. அதனால் தான் இன்று தன்னம்பிக்கை சார்ந்து பேசுகின்ற, எழுதுகின்ற பலரும் அறிவுறுத்துகின்ற விசயம் ”முடிவெடுக்க பழகுங்கள்”.
இலக்கு, திட்டமிடுதல், செயல்படுதல் என்ற வெற்றிக்கான சரடுகள் முடிவெடுத்தலில் தான் ஆரம்பமாகிறது. இந்த ஆரம்பம் அதோடு நிற்பதில்லை. மாறாக, அந்த செயல் ஒரு முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவெடுத்தல் என்ற புள்ளியிலிருந்து தான் உங்களின் அடுத்தடுத்த நிலைகளுக்கு தாவிச் செல்ல முடியும். செயல் சார்ந்து இது மூன்று நிலைகளில் நிகழ்கின்றது.