Tuesday, 3 September 2019

"பல்ப்” ஐடியா!

 

ஃபிளாஷ் கார்டு (FLASH CARD) செய்ய புத்தகம், கார்டூன், கடிகாரம் என பல யோசனைகளை மகள் சொன்னாள். புதிய புத்தகம் ஒன்றிற்கான தரவுகளைத் திரட்டும் வேலையில் மனம் லயித்திருந்ததால் அதைச் செய்து பார்க்கும் மனநிலை எனக்கு இருக்கவில்லை. அவளும் அவள் பங்கிற்கு தொடர்ந்து செயலாக்கத்திற்கான யோசனைகளை என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள்

ஈடுபாடற்ற மனநிலையே மிஞ்சியது

எதுவும் சரியாய் அமையவில்லை என்பதை உணர்ந்தவள் யோசித்த ஐடியாவெல்லாம் "பல்பா"? என்று கேட்டாள்.  

அந்தக் கேள்வியே ஐடியாவானது.

Monday, 2 September 2019

மக்கள் மனசு - 8

வெளிநாட்டு தொழில் முதலீடுகளைப் பெற முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் பயன் உண்டா? அல்லது இது வீண் முயற்சியா?

உள்ளூரில் நசிந்து கிடக்கும் தொழில்களை மேம்படுத்தாமல் அந்நிய முதலீடுகளைக் கொண்டு வந்து என்ன செய்ய? ”கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறேன்என்றானாம்.

Saturday, 17 August 2019

படிக்க, படிக்க தீர்ந்தது!

அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் மகனோடு உரையாடிக் கொண்டிருந்தேன். துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு நண்பரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்

அதைக் கேட்டவன், "நான் சின்னப்பிள்ளையா இருக்குறப்ப, நீங்க சிங்கப்பூர்ல இருக்கேன்னு சொல்லுவீங்க. சொந்தக்காரவங்க வரும் போது துபாய்ல இருக்கேன்னு சொல்வாங்க. ஃப்ளைட்ல வேற போறேன்னு சொல்லுவீங்களா. படத்துல எல்லாம் வானத்துல இந்திர உலகம் இருக்குற மாதிரி காட்டுறதைப் பார்த்துட்டு சிங்கப்பூர், துபாய் எல்லாம் மேகத்துல இருக்கும் போல!  அதுனால தான் ஃபளைட்ல  போறீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் டாடி.

அப்புறம் சோசியல் (SOCIAL) பாடமெல்லாம் படிக்க, படிக்க நான் நினைச்சது தப்பு. சிங்கப்பூர், துபாய் எல்லாம் தரையில தான் இருக்கு. தூரமா இருக்குறதால தான் ஃப்ளைட்ல போறீங்கன்னு தெரிஞ்சுச்சு" என்றான்.