Saturday, 17 August 2019

படிக்க, படிக்க தீர்ந்தது!

அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் மகனோடு உரையாடிக் கொண்டிருந்தேன். துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு நண்பரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்

அதைக் கேட்டவன், "நான் சின்னப்பிள்ளையா இருக்குறப்ப, நீங்க சிங்கப்பூர்ல இருக்கேன்னு சொல்லுவீங்க. சொந்தக்காரவங்க வரும் போது துபாய்ல இருக்கேன்னு சொல்வாங்க. ஃப்ளைட்ல வேற போறேன்னு சொல்லுவீங்களா. படத்துல எல்லாம் வானத்துல இந்திர உலகம் இருக்குற மாதிரி காட்டுறதைப் பார்த்துட்டு சிங்கப்பூர், துபாய் எல்லாம் மேகத்துல இருக்கும் போல!  அதுனால தான் ஃபளைட்ல  போறீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் டாடி.

அப்புறம் சோசியல் (SOCIAL) பாடமெல்லாம் படிக்க, படிக்க நான் நினைச்சது தப்பு. சிங்கப்பூர், துபாய் எல்லாம் தரையில தான் இருக்கு. தூரமா இருக்குறதால தான் ஃப்ளைட்ல போறீங்கன்னு தெரிஞ்சுச்சு" என்றான்.

ரேடியோ பெட்டிக்குள்ள உட்கார்ந்து பாடுறாங்களே? எப்படி இந்தப் பெட்டிக்குள்ள போனாங்க? என என் சிறு வயதில் நினைத்த நிகழ்வுகள் வந்து போனது.

தன் சந்தேகம் தீர்ந்தது என அவன் சொன்ன விசயத்தில் இருந்தே அவனை நகர்த்திப் போக நினைத்துக் கொண்டேன். "வாசித்தால் தெளிவு கிடைக்கும்" என அவன் சொன்னதை அவனுக்கானதாய் ஆக்கி விட வேண்டும்.

 
 

No comments:

Post a Comment