Sunday, 11 March 2012

உதவாக்கரை



காதலுக்கு தூதுவனானாய்
ஜோடிக்கு உதாரணமானாய்
மாடத்திற்கு அலங்காரமானாய்
கடிதத்திற்கு தபால்காரனானாய்
பணத்திற்கு பந்தயக்குதிரையானாய்
பந்திக்கு படையலானாய்
சமானத்திற்கு அடையாளமானாய்
பயன்படும் நீயோ - இப்படியான
உருமாற்றங்களோடும்
உருமாறுதல்களோடும்.

பயன்படுத்தும் மனிதனோ - எந்த
உருமாற்றங்களும்
உருமாறுதல்களும் - இல்லாத
உதவாக்கரையாய்.

நன்றிவெற்றிநடை

Sunday, 1 January 2012

தாத்தாக்களற்ற வாழ்வு

மரத்துப் பிசின் பசை
நார் இடைவார்
மட்டை செருப்பு.
ஓலை தொப்பி
களிமண் பலிங்கி
கொட்டாங்குச்சி வயலின்
கொம்பு ஏற்றம்
சருகு காத்தாடி
கோம்பை வண்டி
மரப்பாச்சி பொம்மை.
இலை பீப்பி
இப்படியான எதுவும்
நம் பிள்ளைகளுக்கு
சாத்தியமற்றுப் போனது

தாத்தாக்களற்ற
தனித்த வாழ்வில்.

நன்றி : முத்துக்கமலம்