வழிபாடுகளின் சந்தேகங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் தீர்வாக இருப்பது ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே. ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கான தீர்வுகளையும், விளக்கங்களையும் தர வேண்டிய ஆன்மிக நூல்கள் சந்தேகங்களையும், முரண்பாடுகளையும் இன்னும் அதிகமாக்கி தருபவைகளாக மாறிப் போய்விட்டன! அவைகளைக் களையும் வகையில் தகுதியானவர்களின் ஆலோசனைகளை கொண்டு தொகுக்கப்பட்ட இந்நூலில் வினாவும், விடையுமாய் கலந்து ஓடும் வரிகள் ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்களை தெளிவாக்கும்.
திருமாலின் திருமேனி தத்துவத்தில் தொடங்கி அவதாரத்தில் முடியும் இத்தொகுப்பு பக்தி சார்ந்த எண்ணங்களை விசாலப்படுத்தி தரும். Saturday, 20 October 2012
Friday, 19 October 2012
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.
[தினமணி கலாரசிகனில்
"கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி” நூலுக்கான அறிமுகமும் - விமர்சனமும்]
கடந்த ஓர் ஆண்டாக எனது மேஜையில் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. மு.கோபி சரபோஜி எழுதிய "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.' என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரை ஆறேழு தடவைகள் படித்தும் விட்டேன். இத்தனை நாள்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதாமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு.
"செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.' 18.11.1936 அன்று இரவு 11.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். நான் இந்தப் பதிவை அதே நாளில் அதே நேரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் துயரமும் விழியோரத்தில் திரண்டு நிற்கும் கண்ணீர் திவலைகளுமாகத் தமிழகம் தந்த அந்த மாமனிதனின் நினைவால் நெகிழ்ந்துபோய் இதை எழுதுகிறேன். இந்தத் தருணத்துக்காகத்தான் கடந்த ஓர் ஆண்டாக இந்தப் புத்தகத்தை மேஜையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
"செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.' 18.11.1936 அன்று இரவு 11.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். நான் இந்தப் பதிவை அதே நாளில் அதே நேரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் துயரமும் விழியோரத்தில் திரண்டு நிற்கும் கண்ணீர் திவலைகளுமாகத் தமிழகம் தந்த அந்த மாமனிதனின் நினைவால் நெகிழ்ந்துபோய் இதை எழுதுகிறேன். இந்தத் தருணத்துக்காகத்தான் கடந்த ஓர் ஆண்டாக இந்தப் புத்தகத்தை மேஜையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
Monday, 15 October 2012
வினை தீர்க்கும் விநாயகர்
கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விநாயகரை ஏன் முதலில் வணங்குகிறார்கள்; விநாயகரின் வலது தந்தம் உடைந்து காணப்படுவதன் காரணம் என்ன; நாம் முழுமுதற் கடவுள் என்று விநாயகரை அழைப்பது ஏன்; அவருடைய வாகனமான எலி எப்படி அமைந்தது; அண்ட சராசரங்களும் விநாயகரின் வயிற்றுக்குள் அடக்கம் என்பது எப்படி; விநாயகர் பிரம்மச்சாரி என்றால் சித்தி-புத்தி சமேத விநாயகர் என்கிறார்களே எப்படி? - இவை போன்ற ருசிகரத் தகவல்களை, அனைவரும் ரசித்துப் படிக்கும் வண்ணம் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மு. கோபி சரபோஜி. விநாயகர் வழிபாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புவோருக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் இந்தத் தொகுப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
- விகடன் பிரசுரம்
சருகான உபதேசங்கள்
துர் சொப்பனம்
நிஜத்தில் நிகழாதிருக்க
கிணற்றுக்குள் கல்லைப்போடு.
புதிதாய் முளைக்க
விழுந்த பல்லை
சாணம் உருட்டி கூரையில் விட்டெறி
திடுக்கிட்ட நெஞ்சு
திடமாய் மாற
மூன்று முறை எச்சில் உமிழு
கண்ணேறு மறைய
காலனா சூடத்தை
முற்றத்தில் கொளுத்து
இருள் பாதை கடக்க
மூச்சு விடாமல்
இறை நாமம் சொல்லு
தலைமுறை தோறும்
உயிர்த்திருந்த உபதேசங்கள்
உதிர்ந்து சருகானது
அடுக்குமாடி குடியிருப்புகள் வந்த பின்.
நன்றி : திண்ணை
Subscribe to:
Posts (Atom)