Monday, 22 December 2014

ஆன்மிக சாண்ட்விச் – 3

திண்ணை இணைய இதழில் “ஆன்மிக சாண்ட்விச்” நூல் குறித்து  கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை

உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.

பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு மறைபொருளை உணர்த்தியும் அதன் சக்தி வீச்சை உணருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 கோபியின் மொழிவளமும் நகைச்சுவையான நடையும் இதை அனைவரும் படிக்கச் சரளமாக்குகிறது. வெளிநாட்டில் வசித்துவரும் ராமநாதபுரத்துக்காரரான இவர் தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு பரவலாக எல்லாத் துறை பற்றியும் எழுதி சேவையாற்றி வருகிறார்.

Monday, 15 December 2014

கைவசமிருக்கும் பெருமை

தாராளமயமாக்களின் தடத்தில்

கலாச்சாரத்தைக் கலைத்து

உலகமயமாக்களின் நிழலில்

பண்பாடுகளைச் சிதைத்து

பொருளாதாரத்திற்கு ஆகாதென

தாய்மொழியைத் தள்ளி வைத்து

நாகரீகத்தின் நளினத்தில்

இனத்தின் குணங்களை ஊனமாக்கி

Tuesday, 9 December 2014

விதியும், மதியும்

மாற்ற முடியாத விசயங்களுக்காக மனதை அலட்டிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்பவர்கள் பலர். அவர்களின் பிரச்சனைகளை வைத்து ஒரு புத்தகமே போடலாம். தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் விலங்குகளை உடைத்துக் கொண்டு வெளிவராத வரை அவர்களுக்கு எட்டா உயரத்தில் தான் வெற்றி இருக்கும்.

மாற்ற முடியாத விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, மாற்றுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுவது என்ற இரண்டு வகைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றி விட முடியும்.

வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர்கள் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை “விதி” என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலயே ”விதியை மாற்ற முடியும்” எனச் சொல்லாமல் ”விதியை மதியால் வெல்லலாம்” எனச் சொல்லித் தந்தனர்.