திண்ணை இணைய இதழில் “ஆன்மிக சாண்ட்விச்” நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை
உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.
பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு மறைபொருளை உணர்த்தியும் அதன் சக்தி வீச்சை உணருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கோபியின் மொழிவளமும் நகைச்சுவையான நடையும் இதை அனைவரும் படிக்கச் சரளமாக்குகிறது. வெளிநாட்டில் வசித்துவரும் ராமநாதபுரத்துக்காரரான இவர் தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு பரவலாக எல்லாத் துறை பற்றியும் எழுதி சேவையாற்றி வருகிறார்.