Wednesday, 22 July 2015

கடவுளிடம் வரம் வாங்கும் முன்

 

மன அழுத்தம் நிறைந்து நிற்கும் பொழுதெல்லாம் அதிலிருந்து விடுபட வாசிப்பின் பக்கம் சாய்வது வழக்கம். நேற்று அப்படியான மனநிலையில் நகைச்சுவை நடையில் அதகளம் செய்யும்  க.சீ.சிவகுமாரின் கதைகளை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்த போது அண்ணன் பாஸ்கர் சக்தி நினைவுக்கு வந்தார். அவரை இதற்கு முன் சந்தித்து கை குலுக்கிய தருணத்தின் காயாத ஈரம் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழ்மொழி விழா 2015 ன் ஒரு அங்கமாக ஏப்ரல் மாதம் தங்கமீன் வாசகர் வட்டம் நடத்திய கதை – திரைக்கதை – வசனம் பயிலரங்கை நடத்துவதற்காக பாஸ்கர் சக்தி வந்திருந்தார். இப்பயிலரங்கிற்கு முந்தைய அறிமுக நிகழ்வாக அங்மோகியோ நூலகத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியோடு ஒரு கோப்பைத் தேநீர் என்ற கலந்துரையாடல் நிகழ்வு நடை பெற்றது.

Monday, 20 July 2015

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

சிங்கப்பூரில் சம கால படைப்புகள் பற்றியும், படைப்பாளிகள் குறித்தும் விவாதிக்கும் ஒரு அமைப்பு வாசகர் வட்டம். ரமலான் கொண்டாட்டத்தை ஒட்டி கிடைத்த நீண்ட விடுமுறையை கொஞ்சம் கவிதை “ரம்”மியமாகவும் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது இந்த மாத வாசகர் வட்டக் கூட்டம். மாதத்தின் மூன்றாவது வார இறுதியை தனக்கான தினமாக வைத்திருக்கும் இவ்வமைப்பின் கூட்டம் அங்மோகியோ தக்காளி அறையில் நடைபெற்றது.( ”தக்காளி அறை” ன்னு பெயர் வைக்க விசேச காரணங்கள் ஏதும் உண்டான்னு இனிமேல் தான் கேட்டுத் தெரிந்து கொள்ளனும்)

Friday, 17 July 2015

தந்தைக்கு...

தமிழ்கலை  மனமகிழ் மன்றம் தஃபர்ரஜ் (TAFAREG) – ரியாத் - சவுதி அரேபியா என்ற   அமைப்பால் நடத்தப்பட்ட எழுதுகிறேன் ஒரு கடிதம் – முகநூல் கடிதப் போட்டிக்கு      எழுதிய கடிதம்

--------------------------------------------------------------------------------------------------------------------


அன்புள்ள அப்பாவுக்கு நான் நலமாக உள்ளேன். நீங்கள் நலமா? அம்மா மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நலன்களைக் கேட்டதாகச் சொல்லுங்கள். கடந்த வாரம் வீட்டிற்கு போன் செய்து எல்லோரிடமும் பேசினேன். 

குட்டிப்பையனோடு நீங்கள் வெளியில் போயிருப்பதாய் அம்மா சொன்னார்கள். நிற்க -