Tuesday, 17 May 2016
Sunday, 15 May 2016
தேவதைகளின் அட்டகாசம் - 7
டாடி..
ம்……….நல்லா இருக்கியா?
நல்லாவே இல்ல.
ஏன்? அப்படி இல்லைன்னாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காது நல்லா இருக்கேன்னு தான் சொல்லனும்.
அதெப்படி? நடக்கயில இடிச்சு கால் விரல்ல வீங்கி வலிக்குதுல.
அதுக்கு என்ன செய்றது?
எனக்கும் தெரியல.
உங்க அம்மாக்கிட்டச் சொல்லி மருந்து போடச் சொன்னியா?
Thursday, 12 May 2016
அன்பென்னும் ஆயுதம்!
இவ்வுலகில் இன்று பலருக்கும் கிடைக்காத விசயமாக பலரும் ஏங்கக்கூடிய விசயங்களில் ஒன்றாக இருப்பது அன்பு தான்! விலைகொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லாத நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற இந்த அன்பை நாம் பரிமாறிக் கொள்வதில்லை. ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு பெற்றோர்கள் பிள்ளைகளிடம், உயரதிகாரிகள் தன் சகஊழியர்களிடம், கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், அண்டைவீட்டார்களிடம், சகமனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்தாமல் முரண்பட்டு நிற்கின்றோம். ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்பதை மறந்து போனதன் விளைவாக நம் மனக்கதவுகளோடு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மனக்கதவுகளையும் மூட வைத்து விட்டோம். இன்று வீடு தொடங்கி பணியிடங்கள் வரை விரிந்து கிடக்கும் விரிசல்கள் எல்லாமே இதன் வெளிப்பாடு தான்.
Monday, 9 May 2016
சுவை பொருட்டன்று – சுனை நீர்!
ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை. பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதில் ஊடேறிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வுகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதைத் தான் பேசுகின்றன.
ஒரு ஞாயிறன்று பெய்த மழை கலைத்துப் போட்டதில் அந்த முதலாளி(தவ்கே)க்கும், தொழிலாளிக்கும் ஏற்படுகின்ற மன ஓட்டத்தையும், சுகாதார அதிகாரியிடம் பகிர முடியாத சத்தியத்தினால் குறுகி நிற்கும் காதலையும் பேசி நகரும் இக்கவிதைத் தொகுப்பு சொற்ப வரிகளைத் தனக்குள் வைத்துக் கொண்டு வாசிப்பாளனின் பார்வையை விசாலமாக்கிய படியே செல்கிறது. அவைகளில் பலவும் வாசிப்பவரின் அனுபவத்திற்கேற்பப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் நெகிழ் தன்மை கொண்டவைகள்.