வழிபாடுகளின் சந்தேகங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் தீர்வாக இருப்பது ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே. ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கான தீர்வுகளையும், விளக்கங்களையும் தர வேண்டிய ஆன்மிக நூல்கள் சந்தேகங்களையும், முரண்பாடுகளையும் இன்னும் அதிகமாக்கி தருபவைகளாக மாறிப் போய்விட்டன! அவைகளைக் களையும் வகையில் தகுதியானவர்களின் ஆலோசனைகளை கொண்டு தொகுக்கப்பட்ட இந்நூலில் வினாவும், விடையுமாய் கலந்து ஓடும் வரிகள் ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்களை தெளிவாக்கும்.
திருமாலின் திருமேனி தத்துவத்தில் தொடங்கி அவதாரத்தில் முடியும் இத்தொகுப்பு பக்தி சார்ந்த எண்ணங்களை விசாலப்படுத்தி தரும். Saturday, 20 October 2012
Friday, 19 October 2012
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.
[தினமணி கலாரசிகனில்
"கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி” நூலுக்கான அறிமுகமும் - விமர்சனமும்]
கடந்த ஓர் ஆண்டாக எனது மேஜையில் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. மு.கோபி சரபோஜி எழுதிய "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.' என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரை ஆறேழு தடவைகள் படித்தும் விட்டேன். இத்தனை நாள்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதாமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு.
"செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.' 18.11.1936 அன்று இரவு 11.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். நான் இந்தப் பதிவை அதே நாளில் அதே நேரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் துயரமும் விழியோரத்தில் திரண்டு நிற்கும் கண்ணீர் திவலைகளுமாகத் தமிழகம் தந்த அந்த மாமனிதனின் நினைவால் நெகிழ்ந்துபோய் இதை எழுதுகிறேன். இந்தத் தருணத்துக்காகத்தான் கடந்த ஓர் ஆண்டாக இந்தப் புத்தகத்தை மேஜையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
"செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.' 18.11.1936 அன்று இரவு 11.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். நான் இந்தப் பதிவை அதே நாளில் அதே நேரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் துயரமும் விழியோரத்தில் திரண்டு நிற்கும் கண்ணீர் திவலைகளுமாகத் தமிழகம் தந்த அந்த மாமனிதனின் நினைவால் நெகிழ்ந்துபோய் இதை எழுதுகிறேன். இந்தத் தருணத்துக்காகத்தான் கடந்த ஓர் ஆண்டாக இந்தப் புத்தகத்தை மேஜையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
Monday, 15 October 2012
வினை தீர்க்கும் விநாயகர்
கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விநாயகரை ஏன் முதலில் வணங்குகிறார்கள்; விநாயகரின் வலது தந்தம் உடைந்து காணப்படுவதன் காரணம் என்ன; நாம் முழுமுதற் கடவுள் என்று விநாயகரை அழைப்பது ஏன்; அவருடைய வாகனமான எலி எப்படி அமைந்தது; அண்ட சராசரங்களும் விநாயகரின் வயிற்றுக்குள் அடக்கம் என்பது எப்படி; விநாயகர் பிரம்மச்சாரி என்றால் சித்தி-புத்தி சமேத விநாயகர் என்கிறார்களே எப்படி? - இவை போன்ற ருசிகரத் தகவல்களை, அனைவரும் ரசித்துப் படிக்கும் வண்ணம் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மு. கோபி சரபோஜி. விநாயகர் வழிபாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புவோருக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் இந்தத் தொகுப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
- விகடன் பிரசுரம்
சருகான உபதேசங்கள்
துர் சொப்பனம்
நிஜத்தில் நிகழாதிருக்க
கிணற்றுக்குள் கல்லைப்போடு.
புதிதாய் முளைக்க
விழுந்த பல்லை
சாணம் உருட்டி கூரையில் விட்டெறி
திடுக்கிட்ட நெஞ்சு
திடமாய் மாற
மூன்று முறை எச்சில் உமிழு
கண்ணேறு மறைய
காலனா சூடத்தை
முற்றத்தில் கொளுத்து
இருள் பாதை கடக்க
மூச்சு விடாமல்
இறை நாமம் சொல்லு
தலைமுறை தோறும்
உயிர்த்திருந்த உபதேசங்கள்
உதிர்ந்து சருகானது
அடுக்குமாடி குடியிருப்புகள் வந்த பின்.
நன்றி : திண்ணை
Friday, 12 October 2012
Wednesday, 10 October 2012
இளம் துளிர் பகத்சிங்
தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய வம்சத்தின்
மூன்றாம் தலைமுறையில் உதித்த புரட்சிவீரன் பகத்சிங். ஆங்கிலேய அரசை கதிகலங்கச் செய்த
பகத்சிங்கின் நடவடிக்கைகள், லாகூர் சதிவழக்கு, டெல்லி சட்டசபையில் குண்டுவீசித் தாக்கிய
வழக்கு ஆகியவற்றில் ஆங்கிலேய அரசின் சூழ்ச்சி என பல சம்பவங்கள் கண்முன்னே காட்சியாக
பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இந்நூலாசிரியர். சுதந்திரம், விடுதலை
என்ற வார்த்தைகளின் மகிமை தெரியாதவர்களுக்கும் கூட, இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்
காற்று பல புரட்சியளர்கள், தேசபக்த வீரர்களின் மூச்சுக்காற்றை காணிக்கையாக்கிப் பெற்றது
என்பதை உணர்ச்சி பூர்வமாகச் சொல்லி தேசபற்றை ஊட்டுகிறது இந்நூல்.
- விகடன் பிரசுரம்
அக்கறை தாண்டிய அன்பு
இன்னும் யோசித்துச் செய்திருக்கலாமென
அங்கலாய்கிறார் அப்பா.
வந்து விடு
பேசித் தீர்த்து திரும்பலாமென
புலம்புகிறாள் அம்மா.
எப்படி இப்படி
சகித்துக் கொள்கிறாய் என
சாடுகிறாள் சகோதரி.
இந்த கஷ்டம் வேணுமா உனக்கு?
என வெடிக்கிறான் சகோதரன்.
கிளையின் சேதத்தைப் பார்த்து
அக்கறை கொள்ளும் இவர்களுக்கு
எப்படிப் புரியவைப்பேன்?
நசிந்து கிடந்தேனும்
வேராய் விரவி
என்னை நேராய்
பிடித்து வைத்திருக்கும்
உன் அன்பை.
நன்றி : வல்லமை
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
இந்த நூலின் எந்த ஒரு பக்கமும் நாயுடுவின் சுய, தனிப்பட்ட வாழ்க்கை புராணத்தை சொல்லவில்லை என வாசிக்கப்போகும் உங்களுக்கு என்னால் உறுதி தரமுடியும். தன்னை விட தான் வாழும் சமூகத்தை, நாட்டை, நாட்டின் எதிர்கால தலைமுறையை நேசித்து அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு வாழ்ந்த ஒரு மாமனிதரின் செயல்கள் மட்டுமே இந்நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது.
Tuesday, 2 October 2012
விருப்பம்
போர்முனை
அமைதியை விட
பேனாமுனை
அமைதியில்
எங்களுக்கும் விருப்பம்தான்.
எங்களைப் போலவே
உங்களுக்கும்
விதவைகளின்
எண்ணிக்கை குறைப்பில்
விருப்பமிருந்தால்.
Subscribe to:
Posts (Atom)