Friday 20 June 2014

தெரியல (தெரியாது) என்பதும் பதில் தான்!

இரண்டாம் வகுப்பிற்கு இடம் பெயர்ந்திருக்கும் மகனிடம் பேசிக் கொண்டிருந்தபோது வகுப்பில் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்களா? என்று கேட்டேன்.

, வன்னா, ,பி,சி,டி தான் சொல்லித்தாராங்க என்றான்.

புத்தகம் எல்லாம் தந்தாச்சுல. அப்புறம் ஏன் பாடம் நடத்தல? என்றேன்.

அதற்கு அவன்தெரியலஎன்றான்.

தெரியலைங்கிறது ஒரு பதிலான்னு நான் கேட்டதும், மிஸ் பாடம் இன்னும் நடத்தலஅவங்க கிட்ட போய் கேட்க முடியாதுல டாடி. அதுனால தான்தெரியலைன்னு சொன்னேன் என்றான். யோசிக்கையில் அவன் சொன்ன பதில் சரி என்றே எனக்கு பட்டது.

குழந்தைகள் தனக்கு தெரியாததை தெரியாது என்று சொல்ல தயங்குவதே இல்லை. ஆனால், நாமோ தெரியலை என்பதைச் சொல்ல தயங்குகிறோம் அல்லது அப்படிச் சொல்லாமல் இருப்பதற்காக நாமே ஒரு காரணத்தை கற்பித்துக் கொண்டு சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறோம்.