Tuesday 11 November 2014

இங்கிலீஸ்ல தெரியாதுல!

வேனில் தம்பி அவன் பிரண்ட்ஸ் கூட ஏதேதோ பேசிக்கிட்டே வந்தான். அவன் பிரண்ட்ஸ்களும் ஏதேதோ சொல்லிக்கிட்டு வந்தாங்க. முதல் சீட்டுல உட்கார்ந்திருந்த மேடம் (PRINCIPAL) “TALK TO ENGLISH” அப்படின்னு சொல்லவும் எதுவுமே பேசாமல் அமைதியா  இருந்துட்டானுக என்றாள் பள்ளியில் இருந்து திரும்பிய மகள்.

மேடம் அப்படிச் சொல்லவும் ஏன் பேசவில்லை? என மகனிடம் கேட்டேன்.

நாங்க பேசுற எல்லாத்துக்கும் இங்கிலீஸ்ல தெரியாதுல டாடி. தமிழ்ல தான் தெரியும். அதான் பேசல என்றான்.

பாடங்கள் சாராத விசயங்களைக் கூட தாய்மொழியில் பேசி மகிழ குழந்தைகளை அனுமதிக்க மறுக்கும் இத்தகைய சூழலில் தான் தாய்மொழி புழக்கத்திற்கான முன்னெடுப்புகளும் நிகழ்ந்து வருகிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. கூடவேகுழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்என்ற கவிக்கோவின் வரிகளும், பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தந்தார்கள்? எனக் கேட்ட தந்தையிடம் பேசாமல் இருக்கச் சொன்னார்கள் என அந்தக் குழந்தை சொன்னதாய்ஸ்கூல் - டேஞ்சர்என்ற புத்தகத்தில் படித்ததும்  நினைவுக்கு வந்தது.