Showing posts with label புதுக்கோட்டை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை. Show all posts

Monday, 19 December 2016

ஒரு நாள் பயிற்சிப் பட்டறை!

          நான் - செந்தில் குமார் - கில்லர்ஜி

மழைக்குக் கூட பொறியியல் கல்லூரிகளின் பக்கம் ஒதுங்கியதில்லை. நேற்று நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரிக்குள் இருந்தேன். புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழ் பயிற்சி முகாமிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை அங்கு தான் வைத்திருந்தார்கள்.

புதுக்கோட்டைக்கு வந்து சேரவும், அங்கிருந்து வெளியேறவும் மட்டுமே உங்கள் செலவு, மற்ற எல்லாச் செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்வதைப் போல அருமையான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். பயிற்சிப்பட்டறை நடத்த இடம் தந்த கல்லூரி நிர்வாகமே மதிய உணவு, சிற்றுண்டி, தேநீர் உள்ளீட்டவைகளோடு கல்லூரிப் பேருந்தையும் கொடுத்திருந்தார்கள். இப்படி உதவும் கரங்கள் இருக்கும் வரை எத்தனை பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தத் துணியலாம்!

Sunday, 11 December 2016

புதுகையில் கை குலுக்குவோமா?

சிரங்கு வந்தவன் சும்மா இருக்க மாட்டான்னு சொல்ற கதையா எதையாவது செய்து கொண்டே இருப்பதும் அதுவே கொஞ்ச நாளில் ஒரு வெறுமை உண்ர்வை தருவதும் கல்லூரிக் காலம் தொட்டே என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் பழக்கமாகி விட்டது. அப்படியான ஒரு வெறுமை சூழ்ந்த நிலையில் என்னில் அக்கறை கொண்ட நண்பர் ஒருவர் முகநூலுக்கும், மற்ற விசயங்களுக்கும் ஒதுக்கும் நேரத்தை வலைப்பக்கம் (BLOG) எழுதுவதற்கும் பயன்படுத்து என்றார். இருந்தால் தானே எழுதுவதற்கு! கணினி சார்ந்து பெரிதாக ஏதும் தெரியாது என்பதால் அவரிடமே எனக்கென ஒரு வலைப்பக்கம் உருவாக்கித் தாங்க…… எப்படி எழுதனும்னு சொல்லிக் கொடுங்க…...  என்றேன்.

உனக்கானதை நீயே சுயமா வடிவமைத்து எழுது என்றவர் சிலநாட்களுக்குப் பின் அழைத்து வலைப்பக்க வேலை நடக்கிறதா? என்றார்.  காரியம் செய்வதை விட அதைச் செய்யாததற்குக் காரணம் சொல்றது அத்தனை கஷ்டமா என்ன? சட்டென, ”பிரபலமானவர்கள் கூட இப்பொழுது வலைப்பக்கங்களில் எழுதுவதை விரும்புவதில்லை. முகநூல் தான் உடனடி கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுதுன்னு கவிஞர். மகுடேசுவரன் கூட முகநூலில் ஒருமுறை சொல்லி இருக்கிறார்” என்று சொன்னேன்.