தினபூமி நாளிதழின் வெளியீடான தினபூமி - மாணவர்பூமி மற்றும் ஹெர்குலிஸ் மாத இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளோடு கூடுதல் கட்டுரைகள் இணைந்து வெளிவந்திருக்கும் தொகுப்பு.
Friday, 16 August 2013
நம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை
Thursday, 15 August 2013
உருமாறும் வசவுகள்
பத்தாண்டாகியும்
பாலூட்ட வக்கத்தவளென
சபித்தவர்களின் வசவுகள்
மலராப் பூக்களாய்
மலர்ந்த மலர்களாய்
உவந்த வார்த்தைகளாய்
உறை நீங்கா வாழ்த்துகளாய்
வருடந்தோறும் உருமாறி
முகம் பார்க்க வந்துவிடுகிறது
எவ்வித குற்றவுணர்வுமின்றி
என் திருமண தினத்தில்.
நன்றி : பதிவுகள்
Thursday, 1 August 2013
தடம்
புறநகரின்
மனைகள்
தோறும்
புதைந்து
கிடக்கிறது.
உழுது
விதைத்து
உயிர்
வளர்க்க
உணவு
தந்தவனின்
வறுமை தடவிய
வியர்வை
ரேகைகள்.
நன்றி : முத்துக்கமலம்
சாமி மரம்
அதுவரையிலும்
பிள்ளையாரோடு
சாமி
மரமாய் இருந்தது.
ஓரிரவில்
பிள்ளையார்
களவு போக
சாலை
விஸ்தரிப்புக்காய்
சாமிமரம்
வீழ்ந்தது விறகாய்!
நன்றி : முத்துக்கமலம்
Subscribe to:
Posts (Atom)