Thursday, 24 October 2013
Tuesday, 22 October 2013
மக்கள் மனசு - 1
அமெரிக்க அரசு முடங்கிப்போய் உள்ளதால் ரூ 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் பாதிக்கப்படுமா? பாதிக்கப்படாதா? என்பது பற்றி...
உலக நாடுகளின் முன் நம்மை நிறுத்திக்கொள்ள இந்த திட்டச் செயலாக்கம் அவசியம் என்பதால் பிரச்சனைகள் இருந்தாலும் கண்டிப்பாக அதைக் கடந்து இஸ்ரோவும், இந்திய அரசும் இதை செயல்படுத்தும்.
நன்றி : பாக்யா வார இதழ்
Thursday, 17 October 2013
தீராக் காதல்
தாயின் தாலாட்டுக்குப் பின்
எங்களின் துயிலுக்கு
இறவாப் பாடல்களால்
தாலாட்டு பாடியவனே.
உடல்கூடும் காமத்தோடு
மனம் கூடும் காதலையும்
கடலளவு கற்றுத் தந்தவனே.
பிறர் மதத்தை இடித்துரைக்காமல்
தன் மதம் குறித்து
“அர்த்தமுள்ள இந்து மதம்” தந்தவனே.
மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு என
“இயேசு காவியம்” படைத்தவனே.
எங்கள் வாழ்வியல் தரிசனங்களுக்கு
உந்தன் வாழ்நாளிலேயே
தத்துவங்கள் தந்தவனே.
உண்மை சொல்ல அஞ்சாமல்
நாங்கள் ஆளாக உன் சுயசரிதையால்
அனுபவங்களை அளித்தவனே.
கவிகளுக்கெல்லாம் அரசனே
எங்கள் கண்ணதாசனே.
நீ வளர்ந்தும்
உன் நிழலில் வளரவைத்தும்
கவி உலகையும்
காப்பிய பரப்பையும் பலரால் நிரப்பினாய்.
உன்னால் உயர்ந்து
முகவரி பெற்றவர்கள்
உன்னை மறக்கலாம்.
நாங்களோ
சூனில் மட்டுமல்ல - ஒவ்வொரு
சூரிய உதயத்திலும் நினைக்கிறோம்.
உன்னையும் - உன்
”கை” “ மை” பட்டு
கன்னி கழிந்த
கவிதைகளையும்
காப்பியங்களையும்
தீராக் காதலோடு திசை எங்கும்!
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்
Wednesday, 2 October 2013
மலடியாகவே
அணிந்தும் அணியாத ஆடை
வலிந்துத் திணித்த உதட்டுச்சாயம்
சிணுங்கி அழைக்கும்
ஒய்யாரச் சிரிப்பு
உந்தித் தள்ளும்
உயிரற்ற காமம் – என
கடைவிரித்துக் காத்திருப்பவளிடம்
புதைந்து கிடக்கிறது
பல புணர்தலுக்குப் பின்னும்
மலடியாகவே மலரும் தந்திரம்.
நன்றி : உயிரோசை
Subscribe to:
Posts (Atom)


