Wednesday, 4 March 2015

நிஜத்தைத் தேடி

பிணத்தை எடுக்கப் பணம் இல்லாததால் உதவி கேட்டு வந்திருப்பதாகவும் வாசலில் தட்டைக் கையில் ஏந்தியபடி நிற்கும் ஒருவன் சொல்லும் உண்மைத்தன்மை மீது கணவன், மனைவிக்கிடையே நிகழும் உரையாடல் தான்நிஜத்தைத்தேடிகதை. இக்கதையின் ஆசிரியர் சுஜாதா.

கல்யாணமாகி ஒன்பது வருசத்திற்குப் பின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் கணவன், மனைவிக்கிடையே இருக்கும்பழக்கப்பட்ட மெளனம்என்ற ஆரம்ப வரிகளிலேயே நகர வாழ்வின் நிஜத்தைச் சொல்லி நேரடியாக கதைக்குள் ஆசிரியர் அழைத்து வந்து விடுகிறார்.

உதவி கேட்டு வந்து நிற்பவனிடம் கேள்விகளால் துளைத்தெடுக்கும் கிருஷ்ணமூர்த்தி மூலம் ஆண்களின் மனநிலையும்-

Tuesday, 3 March 2015

காலப் பெருவெளி

மரபு மயங்கி நிற்க புதுக்கவிதை, நவீனக்கவிதை, பின் நவீனக் கவிதை எனக் கவிதையின் குழம்படிகள் வேறு, வேறு ஓசைகளை எழுப்பிய படியே வேகம் கொள்ளும் இத்தருணத்தில் வாசிப்பாளனோடு படைப்பவனும் தன்னுடைய படைப்பை அந்தந்தத் தளத்தில் கொண்டு நிறுத்த வேண்டியது இன்றைக்கு அவசியமாகிறது. அப்படி இல்லாது போகும் போது அந்தப் படைப்பு அதன் வெளியை முழுமையாக எட்டாமல் ஒரு அடைப்புக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைச் சந்திக்க நேரும். இந்தச் சூழலில் புதியதாக கவிதைப் பரப்பிற்குள் நுழைபவன் தன்னுடைய படைப்பை தொகுப்பாக்கி முன்னெடுத்துச் செல்வதற்குச் சாதகமாக கவிதைகளுக்கான விற்பனைக் கேந்திரம் இல்லாத நிலையில் துணிந்து இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் தங்கமீன் பதிப்பகத்துக்கும், அதன் பதிப்பாளருக்கும் வாழ்த்துகள்.

Monday, 2 March 2015

ரசிக்க – சிந்திக்க – 6

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி. அதுவரையிலும் இந்தியப்பிரதமராக ஆண்களே இருந்து வந்ததால் பிரதமரின் அலுவலக அதிகாரிகள் பிரதமராக இருந்தவர்களைமிஸ்டர் பிரைம் மினிஸ்டர்என்றழைத்து வந்தனர். அதுவே மரபாகவும் இருந்து வந்தது. இந்திராகாந்தி பிரதமர் பதவி ஏற்றதும் அந்த மரபிற்கு சோதனை வந்தது. பெண்பிரதமர் என்பதால் அவரை எப்படி அழைப்பது? என்ற குழப்பம் பிரதம அலுவலக அதிகாரிகளுக்கு வர அவர்களின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட இந்திரா சொன்னார். என்னையும்மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்என்றே அழையுங்கள்

Tuesday, 24 February 2015

ரசிக்க – சிந்திக்க – 5

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அவரைச் சந்திப்பதற்காக அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். அப்போது லிங்கன் தன்னுடைய காலணிகளுக்கு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார். இதைக் கண்ட அந்த நண்பர் லிங்கனை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என சுட்டிக்காட்டி மட்டம் தட்டும் நோக்கத்துடன், ”மிஸ்டர் லிங்கன், “உங்கள் காலணிகளுக்கு நீங்களே பாலீஷ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்என்று கேட்டார்.