Tuesday, 7 April 2015

ரசிக்க – சிந்திக்க – 10

 

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சில் பேச்சை விட செயலுக்கே முக்கியத்துவம் தருபவர். அதிர்ந்து பேசாதவர். அவருடைய அறைக்குப் பக்கத்து அறையில் இருந்த அமைச்சரோ எப்பொழுதும் சப்தமாக பேசும் வழக்கமுடையவர். 

ஒருநாள் சர்ச்சில் தனது அலுவலக அறையில் முக்கியமான வேலையில் இருந்த போது பக்கத்து அறையில் இருந்து வந்த அமைச்சரின் பேச்சு சப்தத்தினால் பொறுமையிழந்தார். உடனே தன் உதவியாளரை அழைத்து அவரிடம் போய் மெல்லப் பேசச் சொல்லு என்று கூறினார். அங்கு சென்று திரும்பிய உதவியாளர்  ”ஸ்காட்லாந்தில் உள்ள முக்கிய அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

Saturday, 4 April 2015

பதறாமல் முன்னேறுங்கள்

நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற ஒரு செயலின் முடிவு எதிர்பார்த்தபடி இல்லாமல் போய்விடுமோ, குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் ஆகிவிடுமோ என்ற நினைப்பு உங்களுக்குள் எப்பொழுது தோன்றுகிறதோ அந்த வினாடியே பதற்றமும் உங்களைப் பற்றிக் கொண்டு விடுகிறது. இந்த நினைப்பு தவறானதாகக் கூட இருக்கலாம். ஆயினும், இத்தகைய சந்தேக நினைப்பானது அந்தச் செயல் முடியும் வரை காத்திருப்பதில்லை. மாறாக, உங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி செயல்களின் ஒருங்கிணைப்பை சிதறடித்து விடுகிறது. அதனால் தான் ”பதறிய காரியம் சிதறும்” என்றார்கள்.

காரியம் சிதறாமல் இருக்க வேண்டுமானால் முதலில் பதற்றத்தை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். அதை உங்களுக்குள்ளேயே வைத்திருந்து செயல்பாட்டுக்கான ஊக்கமாக மாற்றுங்கள். அப்படி மாற்ற முடியாவிட்டாலும் கூட எந்தச் சூழ்நிலையிலும் உங்களின் பலவீனமாக வெளிக் காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அது உங்களின் மீதான மதிப்பீட்டைக் குறைத்து விடும். “ஐயோ….அவரிடமா? வேலையைச் சொன்னாலே பதறிடுவாரு. எப்படி செஞ்சு முடிப்பாரு?” என்ற சந்தேகப்பட்டியலில் உங்களின் பெயரை நீங்களே சேர்த்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.

Thursday, 2 April 2015

காமராஜர் - வாழ்வும் - அரசியலும்

 

கர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் அரசியல் பிரவேசம் மற்றும் அதன் விளைவுகளையும் அலசுகிறது இந்த நூல்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவரை எந்த இடத்திலும் குறை சொல்லமுடியாது மற்றும் பலருக்கும் தெரியாத விஷயத்தைச் சேர்ப்பது. இந்த நூலிலும் பல விஷயங்கள் ஏற்கெனவே பல பத்திரிகைகளிலும், பல பேச்சாளர்கள் பேச்சிலும், முகநூலிலும் வந்த சில செய்திகள் வந்துள்ளன. இதைத் தவிர்த்துப் பார்த்தால் காமராஜரைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள பல விஷயங்கள் இதில் உள்ளன.

காமராஜரின் பாட்டி அவருக்கு வைத்த பெயர் “காமாட்சி”. அவர் அம்மா வைத்த பெயர் “ராஜா”. இந்த இரண்டும் இணைந்து வந்ததுதான் “காமராஜர்” என்பது புதுத் தகவல். இதுபோல பல சிறு சிறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் பரவிக்கிடக்கிறது.

Wednesday, 1 April 2015

ரசிக்க – சிந்திக்க - 9


ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோவைச் சந்தித்த அவருடைய நண்பர், “நான் உங்களைக் கடைசி முறை பார்த்த போது இருந்த மாதிரியே தான் இந்த ஓவியம் இப்பொழுதும் இருக்கிறது. உங்களுடைய வேலையில் எந்த வித முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லையே” என்றார். அதற்கு மைக்கேல் ஏஞ்சலோ, “இல்லையே…..நான் நீங்கள் கடைசியாக இங்கே வந்த போது செய்து கொண்டிருந்த இந்தச் சிற்பத்தின் உதடுகளுக்கு அதிக அழகை அளித்துள்ளேன். தசைகளைப் புடைக்கச் செய்துள்ளேன். இதோ இந்தப் பாகத்தை மென்மைப்படுத்தி உள்ளேன்” என்றார்.