Tuesday, 11 November 2014

இங்கிலீஸ்ல தெரியாதுல!

வேனில் தம்பி அவன் பிரண்ட்ஸ் கூட ஏதேதோ பேசிக்கிட்டே வந்தான். அவன் பிரண்ட்ஸ்களும் ஏதேதோ சொல்லிக்கிட்டு வந்தாங்க. முதல் சீட்டுல உட்கார்ந்திருந்த மேடம் (PRINCIPAL) “TALK TO ENGLISH” அப்படின்னு சொல்லவும் எதுவுமே பேசாமல் அமைதியா  இருந்துட்டானுக என்றாள் பள்ளியில் இருந்து திரும்பிய மகள்.

மேடம் அப்படிச் சொல்லவும் ஏன் பேசவில்லை? என மகனிடம் கேட்டேன்.

நாங்க பேசுற எல்லாத்துக்கும் இங்கிலீஸ்ல தெரியாதுல டாடி. தமிழ்ல தான் தெரியும். அதான் பேசல என்றான்.

Sunday, 9 November 2014

புகைப்படம் - 6

தங்கமீன் அமைப்பின் மாதாந்திர கலந்துரையாடல் அரங்கில்


நகைச்சுவை நானூறு

ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை . கதிர்வேல் அவர்கள் தன்னுடைய நகைச்சுவை நானூறு நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்களை அகற்றிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கும் எனக்கு அது அற்புத பரிசாக இருந்தது. மனம் கொஞ்சம் குன்றும் போதெல்லாம் புத்துணர்வு கொடுத்துக் கொள்ள வசதியாக என் அலுவலகத்திலேயே எப்பொழுதும் வைத்திருக்கிறேன். நீங்களும் வாங்கி வைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

நகைச்சுவை நானூறு என்ற பெயருக்கேற்ப நகை (புன்னகை) + சுவையால் நிரம்பி நிற்கும் இந்நூலின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் உங்களுக்கான சிரிப்பை பெற்றுக் கொள்ளமுடியும்நீண்ட பத்திரிக்கை அனுபவம் கொண்ட கதிர்வேல் அவர்கள் வாழ்வின் நெடிய நிகழ்வுகளை எல்லாம் நகைச்சுவையாக இந்நூலில் பிழிந்து தந்திருக்கிறார். நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் இந்நூலில் நகைச்சுவையாய் நகர்கிறது. நம்மையும் நகர்த்துகிறது!

Monday, 3 November 2014

காரியம் சாதிக்கும் வித்தை!


நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட செய்ததை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா? என்பதில் தான் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு வெறும் கல்வியறிவு இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய இலட்சியத்தை நோக்கிய முயற்சியில் ஏற்படக்கூடிய சாதக, பாதக சூழ்நிலைகள், பிரச்சனைகள் போன்றவைகளை வெற்றிகரமாக கையாளக்கூடிய திறன்களும் வேண்டும். இந்த திறன்கள் எல்லாம் கல்விநிலையங்களில் கற்றுத்தரும் விசயமில்லை. அதனால் தான் அறிவாளிகளை சர்வசாதாரணமாக உருவாக்கித் தருகின்ற தலைசிறந்த கல்விநிலையங்களால் கூட ஒவ்வொரு முறையும் சில வெற்றியாளர்களைக் கூட உருவாக்கித் தர முடிவதில்லை!

கல்விநிலையங்களிலிருந்துஅறிவாளிகள்என்ற முத்திரையோடு வருபவர்கள் பிறரை தந்திரமாக ஏமாற்றுவது, அடுத்தவர் காலை வாரி விட்டு மேலே வருவது, பிறருடைய திறன், திறமைகளை மறுத்து தன் அதிகார பலத்தால் அடக்கி வைப்பது, பிறருடைய செயல்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களின் மூலம் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதையும், இலட்சியங்களை நோக்கி முன்னேறுவதையும் வெற்றியாக நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில்  வெற்றி என்பது இதுவல்ல!