Tuesday, 31 October 2017

வெற்றிக்கு அச்சாரமிட்ட வெயிலுகந்த விநாயகர்

பல வீடுகளில் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகாது. இருவருக்குமான உரசலில் அம்மா பக்கமா? மனைவி பக்கமா? என முடிவெடுக்கத் தெரியாமல் ஆண் விழி பிதுங்கிப் போவான். சில வீடுகளில் இந்த நிலை அப்படியே தழைகீழாக இருக்கும். மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒத்துப் போகாது. அப்பாவா? கணவனா? என முடிவெடுக்க முடியாமல் பெண் பரிதவித்துப் போவாள். மனித குலத்துக்கு மட்டுமே வாய்த்த இப்படியான சிக்கல்களில் சில சமயம் இறைவனும் சிக்கிக் கொள்வதுண்டு. 

Sunday, 22 October 2017

புனித யாத்திரை புறப்படுவோம்!

மனிதனைப் புதுப்பிக்கக் கூடிய மிகப் பெரிய சக்தி பயணங்களுக்கு உண்டு. அந்தப் பயணத்தை பக்தி சிரத்தையாக புண்ணிய தலங்களை நோக்கி ஒருவன் மேற்கொள்ளும் போது அது “யாத்திரை”யாகிறது.  
 
ஒவ்வொரு மதமும் தன் மதத்தவர்கள் சென்று வருவதற்கென புனித இடங்களைக் கொண்டுள்ளன. அங்கு  தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தாலும் அக்காலங்களில் அது அத்தனை சாத்தியமாய் இருக்கவில்லை. இன்றோ அத்தகைய நிலைமை இல்லை. அக்காலங்களில் செய்ய வேண்டிய பிரயாத்தனங்கள் இப்போது தேவையில்லை. நவீன வசதிகள் பயணங்களைப் போல யாத்திரைகளையும் எளிமையாக்கி விட்டன. வாகன வசதிகளால் வழித்தடங்களும், பயண நேரங்களும் சுருங்கின. இதனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் யாத்திரைகளை மேற்கொள்ள முடிகிறது. 

Wednesday, 27 September 2017

இத்தனை மெனக்கெடல் அவசியமா?

நாள் : 1
எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க?

நான் செய்றது இருக்கட்டும். நீயும், உன் தம்பியும் என்ன செய்யப் போறீங்க?

நான் ஸ்டுடியோவுல காட்டுன மாடல் மாதிரி செஞ்சு கொண்டு வந்து தந்துடுங்க. அதை நாங்க கிஃப்டா செஞ்சிடுறோம்.

அதுக்கு போட்டோவெல்லாம் வேணுமே. மிஸ்கிட்ட யாரு கேட்கிறது?

நான் கேட்கிறேன்.

அலைபேசியில் பேசி முடித்ததும், மிஸ் தருறேன் சொல்லி இருக்காங்க.

Wednesday, 30 August 2017

வார்த்தைகளும், வடுக்களும்...

பணச் சிக்கனம், பொருள் சிக்கனம் தெரியும். வார்த்தைச் சிக்கனம் தெரியுமா? குடும்ப பிரச்சனைகளுக்கு இடையேயான விரிசல்கள் பெரிதாகாமல் இருக்க வேண்டுமானால் உங்களிடம் எப்பொழுதும் வார்த்தைச் சிக்கனம் என்ற வயாகரா இருந்து கொண்டேயிருக்க வேண்டும். 

எந்த மனைவியாது, “தொண, தொணன்னு பேசி நச்சரிக்காதீங்க”, “பேசிப் பேசியே கழுத்தை அறுக்காதீங்க” என கணவனைச் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல வீடுகளில் மனைவி கணவனின் காதோடு காது வைத்து ”கல்லுளிமங்கா”, “வாழைப்பழ சோம்பேறி”, “அழுத்தக்காரா”, “ஊமைக்கொட்டான்” எனச் செல்லமாக உசுப்பேற்றி, உசுப்பேற்றியே பேச வைக்கின்றனர். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. கணவனுக்கும், மனைவிக்கும் சேர்த்து பேச வேண்டும் எனச் சொன்னால் கூட அசராமல் பேசுவார்கள். ஒரு ஜோக். ஒரு பையன், “என்ன தலைப்பு கொடுத்தாலும் அதைப்பற்றி ஒரு மணிநேரம் எங்க அம்மாவால் பேச முடியும்” என்றான் பெருமையாக. உடனே அவனின் நண்பன், “இது என்ன பிரமாதம். எந்த தலைப்பும் இல்லாமலே ஒருநாள் முழுக்க கூட என் அம்மாவால் பேசமுடியும். உனக்கு சந்தேகம்னா எங்க அப்பாவைக் கேட்டுப் பாரேன்” என்றான். பேசுவதற்காகவே பிறந்தவர்கள் பெண்கள். அது அவர்களின் குணம்.