கடவுள் ஒருவரே
அந்த ஒருவர்
உருவமற்றவரா? உருவமுடையவரா?
லஞ்சத்தை ஒழிக்க
வேண்டும்
யார் முதலில்
ஒழிப்பது
வாங்குபவரா? கொடுப்பவரா?
சாதிகளை களைய வேண்டும்
யார் சாதியை
உன் சாதியவா?
என் சாதியவா?
உயிர்க் கொலை பாவம்
ஐந்தறிவு உயிர்க்
கொலையா?
ஆறறிவு உயிர்க் கொலையா?
பூரண
மாற்றம் தேவை
யாரிடம்
உன்னிடமா? என்னிடமா?
இப்படியான
முரண்களோடு
முட்டி,முட்டியே முறிந்து போனது
சமுதாய மாற்றம் வேண்டி
முழங்கி நிற்பவனின்
மூச்சுக்காற்று.
நன்றி : அதீதம்