என் இளைப்பாறலின் தடங்கள்...
கை குவித்துப் பிரிய
தேர்ந்தெடுத்த தினத்தில்
வார்த்தைக் கறைகளை வீசி
கம்பீரம் காட்டி நின்றாய்
அந்த கணத்தில்
பொய்த்துப் போனது
அவரவர் நியாயங்களோடு
உடன்பட்டு பிரிவதாய்
ஊருக்கு காட்டிக் கொண்ட
நம் பாசாங்கு தனம்.