Thursday, 30 January 2014

உறுத்தல்

சுதந்திரமில்லா நாட்டில்

சுதந்திரமாய் சுற்றி வந்து

சுதந்திரம் வாங்கித் தந்தவரை

 

சுட்டெறிந்த நாம்

உறுத்தலற்ற விடுமுறையோடு

கொண்டாடித் திரிகிறோம்

 

 அவரையும் –

அவரின் பிறந்தநாளையும்!