Monday, 13 January 2014

மெளன அஞ்சலி - 2

இறந்தவனின் நினைவுகளை

நொடிகளே தீர்மானிக்கின்றன

இரங்கல் கூட்டங்களில்.



மீட்டெடுக்கப்பட்ட நினைவுகளால்

அறைக்குள் வந்தவனின் மயான குழியை

மீண்டும் மேவிக் கொண்டிருந்தது.

வட்டிக்கு ஆசைப்பட்டு

அசலைத் தொலைத்தவனின் நினைவுகள்.