Monday, 27 April 2015

ரசிக்க – சிந்திக்க – 13

 

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் பொன்விழா கொண்டாடியது. அந்த விழாவில் நோபல் பரிசு  பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் கலந்து கொண்டுவைரங்கள்என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவரது உரைக்குப் பின் ஒரு இளைஞன் எழுந்து, “ஐயா, வைரங்களின் தன்மை, குணம், ஒலிச்சிதறல் பற்றியெல்லாம் தெளிவாகச் சொன்னீர்கள். ஆனால், வைரம் செய்வது எப்படி? என்று தாங்கள் சொல்லவில்லையேஎன்றார்.

Monday, 20 April 2015

ரசிக்க – சிந்திக்க - 12

தேவாலயத்தில் சொற்பொழிவை முடித்த போதகர் கூட்டத்தில் இருந்தவர்களிடம்என் அருமைச் சகோதரர்களே! என்னுடன் சொர்க்கத்திற்கு வர விரும்புபவர்கள் கை தூக்குங்கள்என்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் கையைத் தூக்கினார்கள். இதைக் கண்ட போதகர் அவரிடம், ”நீங்கள் சொர்க்கத்திற்கு வரா விட்டால் நரகத்திற்குப் போக விரும்புகிறீர்களா? என்றார்.

Tuesday, 14 April 2015

ரசிக்க – சிந்திக்க – 11

 

பெளதீகத்திற்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி. இராமனிடம் ஒரு இளைஞன் வேலை கேட்டு வந்தான்நேர்முகத் தேர்வில் இராமன் அவனிடம் பெளதீகம் சம்பந்தப்பட்ட சில கேள்விகளைக் கேட்டார். அந்த இளைஞனுக்கோ விடை தெரியவில்லைபெளதீகம் தெரியாதவருக்குத் தன்னிடம் வேலை இல்லை எனக் கூறி இராமன் அந்த இளைஞனை அனுப்பி விட்டார். ஏமாற்றத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்த இளைஞன் அறை வாசலில் ஒரு குண்டூசி கீழே கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு வெளியே செல்லப் புறப்பட்டான்.

Friday, 10 April 2015

விட்டுக்கொடுத்து வசப்படுத்துங்கள்


ஒரு குழந்தையானது தனது பழக்க வழக்கங்களில் மேம்பாடு அடைவதும், தாழ்நிலை அடைவதும் பெற்றோரையும், சுற்றுச்சூழலையும் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்கிறார் மு.. இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் வீடு, சமூகம் சார்ந்தே  குழந்தைகளின் எதிர்காலம் மேம்படுகிறது எனலாம். வீட்டில் பெற்றோர்களையே அதிகம் சார்ந்திருக்கும்  குழந்தைகள் அவர்களைப் பார்த்தே தங்களை வடிவமைக்க முயல்கின்றன. இந்த ஆரம்ப முயற்சி தான் பின்னாளில் ஒரு குழந்தையை சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் பெற்றோர்களின் நடவடிக்கைகள் மிகப் பெரிய தாக்கத்தை தரக்கூடியதாக அமைவதால் தான் குழந்தைகள் உளவியலில்பெற்றோர்குழந்தைகள் உறவுகுறித்து அதிக கவனம் அளிக்கப்படுகிறது. ”மக்குஎன பள்ளியிலிருந்து விரட்டியடித்த போது நான் உனக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என அரவணைத்துக் கொண்ட தன் தாயின் நடவடிக்கையால் செவித்திறன் குறைந்த ஒரு குழந்தை பின்னாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளரானது. அந்தக் குழந்தையின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!

Wednesday, 8 April 2015

இராமருக்கு அருளிய ஆதிஜெகன்னாதர்

புதிதாக வீடு கட்டும் போது கட்டிட சாமான்களை போட்டு வைப்பதற்காக தற்காலிக குடிசை ஒன்றை வீடு கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அமைப்பது நம்முடைய வழக்கம். அப்படி அமைக்கும் போது அந்த இடத்திற்கு உரியவரிடம் அதற்கான அனுமதியை கேட்போம் இல்லையா? அதுபோல சீதையை மீட்க கடலின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த இராமர் கடலரசனிடம் கடல் அலைகலின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் காத்திருந்தார். அவனுக்கென்ன வேலையோ? மூன்று நாட்களாக இராமரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமலிருந்தான். இராமரோ அங்கிருந்த தர்ப்பையை ஆசனமாக கொண்டு சயனித்தபடியே காத்திருந்தார். அப்படி இராமர் சயனித்திருந்த தலம்திருப்புல்லணைஎன அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மருவிதிருப்புல்லாணிஎன்று பேச்சு வழக்கானது. வடமொழியில் இவ்வூர்தர்ப்பசயனம்என்றழைக்கப்படுகிறது. தர்ப்பம்புல்; சயனம்உறங்குதல்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருப்பவர் ஆதி ஜெகன்னாத பெருமாள். பஞ்சதரிசன தலமான பூரியில் இடுப்பு உயர அளவில் மட்டுமே வீற்றிருந்து காட்சி தரும் ஜெகன்னாதர் இங்கு முழுமையாக காட்சி தருவதால் இத்தலம்தட்சிண ஜெகன்னாதம்என்று அழைக்கப்படுகிறது.