மெல்ல பொழுது புலர்ந்த நேரத்தில் அதிகாலை தூக்கத்தை இரசித்த படி படுக்கையில் கிடந்த மகனும், மகளும் மணநாள் வாழ்த்துகளை தந்தார்கள். அதன்பின் எனக்கும், மனைவிக்கும் கைகள் நிரம்ப பரிசுப் பொதியைத் தந்தார்கள்.
"நாங்களா ஐடியா பண்ணி வாங்கி பேக் செஞ்சோம். உங்களுக்கு யூஸ் ஆகுமான்னு தெரியல" என்றார்கள்.
"பரிசுப் பொருட்களை விட உங்கள் வாழ்த்துகள் தான் சந்தோசம்" என்றேன்.
ஆளுக்கொரு முத்தத்தை அன்பாய் தந்தவர்கள் பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
பேக்கிங்கிற்குள் என்ன தான் இருக்கிறது என பார்ப்போமே என்ற நினைப்போடு ஒவ்வொன்றாய் பிரித்தேன்.
பேனா,
நோட்டு, ஒரு டீ
கப், சன்ரைஸ் காப்பித்தூள் பாக்கெட், கொறிப்பதற்கான ஸ்நாக்ஸ் வைத்துக் கொள்ள
ஒரு டின் என
வரிசை கட்டி நின்றது.
ஒரு எழுத்தாளனாய் இருப்பவனுக்கும், ஆசிரியையாய் இருப்பவளுக்கும் இதை
விட வேறென்ன வேண்டும்?
No comments:
Post a Comment