ஏழாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு தேர்வு விடுமுறையில் தரப்பட்டிருக்கும் புராஜெக்டில் ஒன்று காந்தியின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதிக் கொண்டு வர வேண்டும் என்பது!
கூகுள், யூடியூபில் தேடிப் பார்த்து விட்டு அது பற்றி எதுவும் கிடைக்கல டாடி...... என என்னிடம் வந்தான். அருகில் இருந்த மகள் அவள் பரிசாக வாங்கி இருந்த "சத்திய சோதனை" புத்தகத்தைக் கொடுத்து இதை படிச்சிட்டு அப்படியே நாடகமா எழுதிடு என்றாள்.
இந்த புத்தகமே இவ்வளவு பெருசா இருக்கு. இதை எப்படி படிச்சு எழுத முடியும்? என்றவன் நீங்க எழுதித் தர முடியுமா? என என்னிடம் கேட்டான்.
காந்தியை முழுமையாக நான் வாசித்தவனில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாய் வாசித்த அளவில் மனதளவில் ஓடிய காந்தியின் வாசிப்புப் பக்கங்களை நாடகமாக்குவது என்பதை நினைக்கும் போதே பெரும் மலைப்பாய் இருந்தது. அதுவும் ஆங்கிலத்தில் வேண்டும் என்றான். நமக்கிருக்கும் ஆங்கில அறிவுக்கு காந்தியின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்குவது எல்லாம் நடக்கிற கதையா? என நினைத்துக் கொண்டேன்.
காந்தியின் இளமைப் பருவம், காந்தியின் யாத்திரை, காந்தியின் உண்ணாவிரதம், காந்தியின் சட்டமறுப்பு இயக்கம் என அவர் வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியை படித்து வரவோ, நாடகமாக்கி வரவோ, எழுதி வரவோ சொன்னால் பிள்ளைகள் கொஞ்சமெனும் மெனக்கெடுவார்கள். அப்படியில்லாமல் பொத்தாம் பொதுவாய் "காந்தியின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கிக் கொண்டு வா" என பிள்ளைகளுக்கு புராஜெக்ட் கொடுத்தால் மிஸ் மீது கோபம் வருகிறதோ, இல்லையோ காந்தி மீது பிள்ளைகளுக்கு நிச்சயம் வெறுப்பு வரத் தானே செய்யும்! பள்ளிகள் இந்த விசயத்தில் கொஞ்சம் யோசித்தால் தேசத்தலைவர்களுக்கு நல்லது என தோன்றுகிறது.
காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்ட நேரத்தில் இப்படியான விதைகளை விதைப்பது காந்தியை அவமதிப்பது போலாகாதா?
அருமை இது குறித்து கதையாக சொல்லித்தர வேண்டிய பெற்றோருக்கு நேரமில்லை. ஆசிரியர்களுக்கோ தேர்வுக்கு சதவீதத்தை முடிக்க வேண்டிய நிர்பந்தம். அரசுக்கு நிதியில்லை. அரசியல்வாதிகளுக்கும் அக்கறை இல்லை.
ReplyDeleteஉண்மைதான்
ReplyDelete