கடந்த வருடத்தில் இருந்து அவைகளோடு சேர்த்து புததகமும் தரலாம் என அவர்களிடம் ஆலோசனை சொன்னேன். ஆரம்பத்தில் புத்தகமுமா? என இழுத்தார்கள். ஆனால், மறுக்கவில்லை. அந்த யோசனை நல்ல பலனைத் தந்தது. தங்களின் பிறந்த நாள உள்ளிட்ட எல்லா பள்ளி நிகழ்வுகளுக்கும் தர புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
ஆசிரியர் தினத்திற்கு "தன்னம்பிக்கை" வரிசையிலான புத்தகங்கள் தரலாம் என எங்களுக்குள் முடிவானது. இன்று ஆசிரியர்களுக்கு வழங்கும் நோக்கில் நேற்றிரவு அலுவல் நேரத்தில் அழைத்து ஐந்து புத்தகம், மூன்று பேனா வாங்கித் தாருங்கள். கார்டு நாங்களே செய்து விடுகிறோம் என்றார்கள். சரி என சொல்லியிருந்தேன்.
வேலை நேர நெருக்கடியால் கடைக்குச் சென்று புத்தகங்களைத் தேர்வு செய்து தர இயலவில்லை. என்ன செயயலாம்? என்று அவர்களிடம் கேட்டேன். நீங்களும் எழுதியி ருக்கிீங்கள்ள? அதை கொடுத்துடுவோம் என்றார்கள். அட...ஆமால! நாமளும் நாளு தலைப்பில் புத்தகம் போட்டிருக்குமே என நினைப்பு வந்தது. ஐந்து புத்தகங்களை கொடுத்தேன். மகன் கடைக்கு எடுத்துச் சென்று பேக்கிங் செய்து வந்தான்.
பார்க்கும் போதே பொறாமையாய் இருந்தது. நாமளும் தான் பள்ளிக்கூடம் போனோம். நமக்கும் தான் வாத்தியார் இருந்தாரு. ஒருநாளாவது அவரோடு இப்படி இருந்திருப்போமா? என்ற ஏக்கம் தான் தோன்றியது.
No comments:
Post a Comment