
Wednesday, 2 December 2020
”சும்மா” எதுக்கு வாசிக்கனும்?

Tuesday, 26 May 2020
Thursday, 14 May 2020
Monday, 11 May 2020
நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்
வாங்கி வந்த புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என சமூகவலைத்தளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர். தாங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து அறிமுகங்களைச் செய்து வருகின்றனர். இப்படி நீட்டப்படும் பட்டியல்களாலும், செய்யப்படும் அறிமுகங்களாலும் என்ன பயன்? புத்தகங்களுக்கான அறிமுகங்கள் விமர்சனமாகுமா? என்ற எதிர்வினையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நூலுக்கான அறிமுகம் என்பது வெறும் அட்டைப் படத்தை தொடர்ந்து ஒரே நிலையிலோ அல்லது பல்வேறு நிலைகளிலோ ஊடகங்கள் வழியே தொடர்ந்து பதிவிட்டு டிரண்டிங்காக மாற்றி அதன் மீது கவனத்தைக் குவிய வைப்பது. இதை படைப்பாளி தனிப்பட்ட முறையில் செய்கின்றான். அல்லது படைப்பாளியின் நண்பர்கள், பதிப்பாளர் ஆகியோர் செய்கின்றனர். சமீபத்தில் முகநூலில் ஒரு எழுத்தாளர் புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய புத்தகங்கள் என ஒரு பட்டியல் போட்டிருந்தார். சற்றே உற்று நோக்கி வாசித்த போது அந்த புத்தகப் பட்டியலில் இருந்த அத்தனை புத்தகங்களும் அவர் எழுதி வெளியிட்டவைகள். புத்தக அறிமுகத்தில் இது ஒரு வகை. இன்னொன்று படைப்பாளியின் நண்பர்கள், அல்லது சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாங்கி வாசித்த வாசகர்கள் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பை அல்லது நூலின் சில அம்சங்களை அடையாளப்படுத்தி அந்தப் படைப்பை அறிமுகம் செய்வது இன்னொரு வகை. இலக்கிய விமர்சனம் என்பது நீர்த்துப் போய் விட்ட நிலையில் இவ்விரு வகைகளில் செய்யப்படும் அறிமுகங்கள் தான் ஒரு படைப்பை தெரிந்து கொள்ளவும், புத்தக விற்பனையை தூக்கி நிறுத்தவும், பதிப்புத் துறைக்கு வரும் புதியவர்களுக்கு நம்பிக்கைக் கீற்றாகவும் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.