அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் பதிப்பகத்திற்குத் தர ஒப்புக் கொண்டிருந்த நூலுக்கான தகவல்
சேகரிப்பு, தட்டச்சு வேலைகளைச் சில
மாதங்களாக தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.
நேற்றிரவு பாலகுமாரனை வாசிக்கலாம் என
தோன்றியது. தேடியதில் “முன் கதைச் சுருக்கம்’ கிடைத்தது. இரவில்
வாசித்தேன். அறைக்குள் வந்த
மகள் ”தீவிர வாசிப்பா?” என்றாள்.
மறுநாளும் பாலகுமாரன் வாசிப்பு மனநிலை
இருக்க மீண்டும் தேடியதில் “பச்சை வயல் மனது”
கிடைத்தது. வாசித்துக் கொண்டிருந்தேன்.
அலுவலகத்திற்கான ஆயத்த நேரம் நெருங்கியதை நான் கவனித்திருக்கவில்லை. நினைவூட்டிய படியே அறைக்குள் வந்த மகள், “இப்பவும் தீவிர வாசிப்பா?” என்றாள்.
அனிச்சையாய் “சும்மா தான்” எனச் சொல்லி இருந்திருக்கிறேன்.
சட்டென கேட்டாள். “சும்மா - எதுக்கு படிக்கனும்?”
இதுவரை படித்த எல்லாம் சும்மா தானா? என்றொரு கேள்வி இன்னும் சுழற்றியடித்தபடியே இருக்கிறது.
சும்மாதான் படிப்பது தீவிரமாக இல்லை![[
ReplyDelete